பொதுவாகவே சினிமாவில் முன்னணி ஹீரோக்கள் படங்களில் நடிப்பதுடன் சேர்ந்து அவர்களுக்கு இருக்கும் மற்ற திறமைகளையும் காட்டி வருவார்கள். அந்த வகையில் இப்போது ட்ரெண்டாகி வருவது ஹீரோக்கள் பாடுவது தான். சமீபத்தில் விஜய் நடிக்கும் படங்களில் கண்டிப்பாக ஒரு பாடல் பாடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.
அப்படி இவர் பாடிய பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை ஏற்படுத்தி வருகிறது. ஆனால் இவர் இந்த மாதிரி படத்தில் பாடுவது இப்போது ஆரம்பிக்கவில்லை. இவர் வளர்ந்து வரும் காலகட்டத்திலேயே இவர் படங்களுக்கு பாடியிருக்கிறார். அவர் முதன் முதலில் பாடிய பாடல் 1994 ஆம் ஆண்டு வெளிவந்த ரசிகன் என்ற திரைப்படத்தில் “பாம்பே சிட்டி சுக்கா ரொட்டி” பாடல்.
அதனைத் தொடர்ந்து அவர் படங்களுக்கு நிறைய பாடல்கள் பாடியிருக்கிறார். அத்துடன் இவர் படத்திற்கு மட்டுமல்லாமல் இவரின் சில நண்பர்கள் படத்திலும் பாடியிருக்கிறார். 1999 ஆம் ஆண்டு வெளிவந்த பெரியண்ணா திரைப்படத்தில் விஜய், சூர்யாவிற்காக மூன்று பாடல்களை பாடியிருக்கிறார். அதிலும் இவர் பாடிய பாடல் “நான் தம்மடிக்கிற ஸ்டைல பாத்து” இந்த பாடல் அப்போதே பட்டி தொட்டி எல்லாம் ஒலித்த பாடல்.
அத்துடன் 1998 ஆம் ஆண்டு வெளிவந்த வேலை என்ற திரைப்படத்தில் நடிகர் விக்னேஷ் அவருக்காக “காலத்துக்கேத்த ஒரு கானா” என்ற பாடலை விஜய் பாடியிருப்பார். இப்பாடலை விஜய், நாசர், பிரேம்ஜி ஆகியோர் சேர்ந்து பாடி இருக்கிறார். இந்தப் பாடலுக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். இந்த படம் வெளியான சமயத்தில் ரசிகர்களிடமிருந்து பெரிய வரவேற்பு ஏற்படுத்தியது.
மேலும் அதே வருடத்தில் வெளியான துள்ளித் திரிந்த காலம் என்ற படத்தில் அருண் விஜய்க்காக “டக் டக் டக் கால்கள் போடும் தாளம்” இந்த பாடலை விஜய் அழகாக பாடி கொடுத்திருப்பார். இந்தப் பாடலில் இவர் வசீகரமான குரலால் கவர்ந்திருப்பார். இந்தப் பாடலை உன்னி கிருஷ்ணன் அவர்களுடன் சேர்ந்து பாடியிருக்கிறார்.
இப்படி இவர் பாடிய பாடல்கள் அனைத்தும் 23 வருடத்திற்கு முன் பட்டி தொட்டி எல்லாம் ஒலித்த பாடலாகும். அத்துடன் இந்த பாடல்கள் எல்லாம் இப்பொழுது கூட கேட்பவர்களின் மனதில் மெய்சிலிர்க்கும் வகையில் அருமையான பாடல்களாக அமைந்துள்ளது.