Actor Vijay: எப்போதுமே தளபதி விஜய் மேடைகளில் குட்டி ஸ்டோரி உடன் தான் தன்னுடைய பேச்சை துவங்குவார். அப்படி தான் விஜய், நேற்று 234 தொகுதிகளில் உள்ள 10 மற்றும் 12ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ மாணவிகளுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார்.
அங்கும் அவரது குட்டி ஸ்டோரி இடம்பெறும் என ரசிகர்கள் மட்டுமல்ல, அங்கிருக்கும் மாணவ மாணவிகளும் காத்திருந்தனர். ஆனால் விஜய் இந்த முறை புதுவிதமாக ஏற்கனவே சூப்பர் ஸ்டார் ஒரு மேடையில் ஆங்கிலத்தில் சொன்னதை விஜய் தமிழிலும் ஆங்கிலத்திலும் பிசுறு தட்டாமல் அட்ட காப்பி அடித்திருக்கிறார்.
‘நீங்க பணத்தை இழந்துவிட்டால், எதையுமே இழக்கவில்லை. ஆரோக்கியத்தை இழந்துவிட்டால் ஏதோ ஒன்றை இழக்கிறீர்கள்.ஆனால் குணத்தை இழந்துவிட்டால் நீங்கள் எல்லாத்தையும் இழந்து விடுவீர்கள்’ என ரஜினி சொன்ன அதே டயலாக்கை விஜய் மேடையில் பேசினார்.
அதேபோல தனுஷ் அசுரன் படத்தில் சொன்ன டயலாக் ஆனா, ‘காசு இருந்தா எடுத்துக் கொள்வார்கள். பணம் இருந்தால் பிடுங்கிக் கொள்வார்கள். படிப்பு மட்டும் யாராலும் எடுத்துக்கவே முடியாது’ என்பதையும் அங்கிருக்கும் மாணவ மாணவிகளுக்கு அறிவுரையாக சொன்னார். மேலும் அந்த நிகழ்ச்சியில் தளபதி எதற்காக இப்படி ஒரு பாராட்டு விழாவை ஏற்பாடு செய்திருக்கிறார் என்ற சஸ்பென்ஸையும் அங்கிருக்கும் மாணவி ஒருவர் மூலமே உடைத்தெறிந்துவிட்டார்.
ஒரு மாணவி விஜய் இடம் பரிசு வாங்கும் பொழுது மைக்கை வாங்கி,’ கை சலிக்காமல் அனைவருக்கும் சால்வை போற்றி, வயிறார உணவும் வழங்கி, மனம் குளிர கல்வி விருதும் தந்து, எங்கள் மனங்களை எல்லாம் ஆளும் விஜய் அண்ணா, நாளை மாநிலத்தை ஆள வரவேண்டும்’ என கவிதை வாசித்து ஒட்டுமொத்த அரங்கையும் அதிர்ச்சியடைய வைத்தார்.
வரும் 2026 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் விஜய் அரசியலுக்கு வருவார் என உறுதியாக இருக்கும் சூழலில், அது நிச்சயம் தான் என்பதை இந்த மாணவி மூலம் விஜய் பகிரங்கமாக வெளிப்படுத்தி இருக்கிறார். மேலும் முதல் தலைமுறை வாக்காளர்களை கவர்ந்து விட்டால் அவர்களை வைத்து அவர்களின் பெற்றோர்களையும் கவர்ந்து விடலாம் என்ற மாஸ்டர் பிளானில் தான் விஜய் கல்வி விருது வழங்கும் விழாவை நேற்று நடத்தி இருப்பதாக பலரும் விமர்சிக்கின்றனர்.