தற்போது தமிழ் சினிமாவில் உச்ச நாயகனாக இருக்கும் விஜய்யின் ஆரம்ப கால படங்களில் எல்லாம் படுதோல்வியை சந்தித்தது. அந்த சமயத்தில் விஜயின் நடிப்பில் 1996 ஆம் ஆண்டு விக்ரமன் இயக்கத்தில் வெளியான காதல் திரைப்படமான பூவே உனக்காக படத்தை முன்னணி இயக்குனர் விக்ரமன் இயக்குனர்.
சூப்பர் ஹிட் அடித்த இந்த படம்தான் விஜய்யின் திரை வாழ்க்கையில் முதல் பெரிய வெற்றிப் படமாகவும், திருப்புமுனையாகவும் அமைந்தது. இந்தப் படத்தின் வெற்றியை தொடர்ந்து கன்னடம், ஹிந்தி போன்ற மொழிகளிலும் மறுஆக்கம் செய்யப்பட்டு ஹிட் ஆனது.
ஆனால் இந்த படத்திற்கு பிறகு படத்தின் இயக்குனர் விக்ரமன் மற்றும் விஜய் இருவரும் அடுத்ததாக இணைய இருந்த படத்தின் கலந்துரையாடலின்போது அந்தப் படத்திற்கு விஜய் கூடுதலாக சில யோசனைகளை சொல்லியிருக்கிறார்.
அப்போது விக்ரமனும் சில ஐடியா கொடுத்திருக்கிறார். அந்த சமயத்தில் இருவரது கருத்தும் ஒத்துப் போகாததால் கருத்து வேறுபாடு ஏற்பட்டு வாக்குவாதத்தில் முடிந்திருக்கிறது. அதன் பின் விஜய் அந்த படத்தின் பாடல் காட்சிக்கான படப்பிடிப்பை முடித்த பிறகு, படத்தை நிறுத்தி விட்டார்.
இதனால் துளிகூட அசராத விக்ரமன், இதை சவாலாக எடுத்துக்கொண்டு அதே கதையை வைத்து சூர்யா நடிப்பில் 2002 ஆம் ஆண்டு வெளியான உன்னை நினைத்து என்ற சூப்பர் ஹிட் படத்தைக் கொடுத்தார். இந்தப் படத்தில் சூர்யாவுடன் இணைந்து சினேகா, லைலா இருவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தனர்.
இந்தப்படமும் பூவே உனக்காக படத்தை போலவே மாபெரும் வெற்றியை கண்டது. படம் ரிலீஸ் ஆனபோது விஜய் விக்ரமனுடன் வாக்கு வாதத்தில் ஈடுபடாமல் இருந்திருக்கலாமே என நிச்சயம் யோசித்துப்பார். சொல்லப்போனால் உன்னை நினைத்து படத்தின் மிகப்பெரிய வாய்ப்பை, வெற்றி கிடைத்ததும் விஜய் தவற விட்டதாக தான் சொல்ல வேண்டும்.