Vijay-TVK: முதல்வர் நாற்காலியை பிடித்தே தீருவேன் என்ற வெறியில் விஜய் இருக்கிறார். ஆனால் நாங்கள் இருக்கும் போது அது எப்படி முடியும் என அவருடன் இருக்கும் அப்ரசண்டிகள் சைலன்ட்டா ஆப்பு வைத்து வருகின்றனர்.
இதுதான் அவருடைய கட்சியை பொறுத்தவரையில் மக்களின் மனநிலை. அதாவது குறிக்கோளை நோக்கி நகர்வதற்கு சுற்றிலும் தடைகள் வந்து கொண்டே இருக்கும். ஆனால் உடன் இருப்பவர்களால் விஜய்க்கு பின்னடைவு வந்துவிடுமோ என்ற அச்சம் அவருடைய ரசிகர்களுக்கே இருக்கிறது.
உதாரணத்திற்கு அவர் இப்போது வரை மீடியாக்களை சந்திக்காமல் இருக்கிறார். இது அவரை சுற்றி இருப்பவர்களின் அறிவுரையாக இருக்கலாம். இது பெரும் பின்னடைவாக இருக்கிறது. மக்கள் மத்தியில் ஒரு குழப்பத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
அதேபோல் மற்ற கட்சிகளை சரியான பேச்சாளர்கள் இல்லை அப்படி இப்படி என விமர்சிக்கின்றனர். ஆனால் இந்த கட்சியிலேயே அப்படி ஒரு நிலைமை தான் இருக்கிறது. மேடையில் பேசும்போது பேப்பரில் எழுதி வைத்துக்கொண்டு பேசும் நிலை தான் உள்ளது.
விஜய்க்கு ஆப்பு வைக்கும் அப்ரசண்டிகள்
ஆதவ் அர்ஜுனா இப்படித்தான் விமர்சிக்கப்பட்டு வருகிறார். மற்றவரை குறை சொல்லும் முன் நீங்கள் எந்த அளவுக்கு இருக்கிறீர்கள் என்பதை நினைவில் வையுங்கள் என பொதுமக்கள் வெளிப்படையாக கூறுகின்றனர்.
அதேபோல் புஸ்ஸி ஆனந்த் நடந்து கொள்ளும் முறையும் பேசுவதும் பலருக்கு பிடிக்கவில்லை. பொதுவெளியில் எப்படி இருக்க வேண்டும் என்று அவருக்கு தெரியவில்லை. இவர்களை நம்பியா விஜய் கட்சி ஆரம்பித்துள்ளார்.
ஓட்டை படகில் சவாரி செய்யும் இவர் கரை சேருவாரா என ஒரு கேள்வி இருக்கிறது. உண்மையில் இது ஏற்றுக் கொள்ளப்பட வேண்டிய விஷயம். பெரும் இலக்கை அடைய வேண்டும் என்றால் அதற்கான திட்டமிடல் முக்கியம்.
அதை விஜய் செய்தாலும் உடன் இருப்பவர்களை கண்டிக்க தவறுகிறாரோ என்று தோன்றுகிறது. இனியாவது அவர் இதையெல்லாம் கருத்தில் வைத்து செயல்பட வேண்டும்.
இல்லை என்றால் இது போன்ற ஆப்ரசண்டிகளை வைத்துக்கொண்டு அல்லல் பட வேண்டி இருக்கும். காண்ட்ராக்டர் நேசமணி போல் ஆகிவிடும் விஜய் நிலை என்பது அனைவரின் கருத்து.