பிறந்தநாளில் விஜய் கொடுக்கும் ட்விஸ்ட்.. ஏமாற்றிய தளபதி

Vijay : விஜய்யின் பிறந்தநாள் ஜூன் 22ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதற்காக அவரது தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் பல ஏற்பாடுகள் செய்து வருகிறார்கள். மேலும் கடந்த இரண்டு வருடங்களாக பத்தாம் மற்றும் 12 ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி வருகிறார்.

இந்த ஆண்டு வருகின்ற 30ஆம் தேதி இந்த விழா நடக்க இருக்கிறது. இந்த சூழலில் விஜய்யின் கடைசி படமான ஜனநாயகன் படத்தின் மீது ஒட்டுமொத்த சினிமாவின் எதிர்பார்ப்பும் இருந்து வருகிறது. விஜய்யின் பிறந்தநாள் அன்று இந்த படத்தின் போஸ்டர் மற்றும் டீசர் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் விஜய் தன்னுடைய பிறந்தநாள் அன்று ஜனநாயகன் படத்தைப் பற்றி எந்த அப்டேட்டும் வெளியிட வேண்டாம் என்று கூறி இருக்கிறாராம். ஏனென்றால் இப்போது அரசியலில் கவனம் செலுத்தி வருகிறோம். இதில் படத்தைப் பற்றி வெளியிட்டால் கவனம் முழுக்க அதில் தான் சென்று விடும்.

பிறந்தநாளில் ஏமாற்றம் கொடுக்க போகும் விஜய்

ஆகையால் அரசியல் சம்பந்தமான விஷயங்களை அன்று செய்யலாம் என்று திட்டமிட்டு இருக்கிறார்களாம். இதனால் ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைய இருக்கின்றனர். ஏனென்றால் ஜனநாயகன் படத்தின் அப்டேட் விஜய்யின் பிறந்தநாளில் வரும் என ரசிகர்கள் ஆர்வமாக காத்திருந்தனர்.

அது இல்லை என்பது பெரிய ஏமாற்றம் தான். ஆனாலும் அதை ஈடு செய்யும் வகையில் விஜய் கண்டிப்பாக பெரிதாக ஏதாவது செய்வார் என எதிர்பார்க்கபடுகிறது. ரசிகர்களை ஒன்று திரட்டி நேராகவே மாநாடு போல நடத்த வாய்ப்பு இருக்கிறது.

மேலும் ஜனநாயகன் படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக உள்ளதால் அதற்கு ஒரு மாதத்திற்கு முன்னதாக பிரமோஷன்களை செய்ய உள்ளனர். அதுவரை முழுக்க முழுக்க அரசியல் சம்பந்தமான விஷயங்கள் தான் வர இருக்கிறது.‌