விஜய் டிவி சீரியல் ஹீரோவாக இருந்து பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்ற தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கி பிரபல நடிகராக மாறிய ஒருவர் தளபதி 65(#Thalapathy65) படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளாராம்.
மாஸ்டர் படத்தை தொடர்ந்து அடுத்ததாக விஜய் தளபதி65 படத்தில் நடிக்க உள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தை நெல்சன் இயக்க உள்ளார். மேலும் மூன்றாவது முறையாக விஜய் அனிருத் கூட்டணியில் இந்தப் படம் உருவாக உள்ளது.
அதுமட்டுமில்லாமல் விஜய்க்கு ஜோடியாக தெலுங்கு சென்சேஷனல் நடிகை பூஜா ஹெக்டே ஒப்பந்தமாகியுள்ளார். இவர் பல வருடங்களுக்கு முன்பு முகமூடி என்ற படத்தில் நடித்திருந்தாலும் தற்போது தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பதால் விஜய் பட வாய்ப்பு கிடைத்துள்ளது.
மேலும் முதற்கட்ட படப்பிடிப்பை சென்னையில் உள்ள கோகுலம் ஸ்டூடியோவில் எலக்சனுக்கு பிறகு தொடங்க உள்ளதாம். அதைத்தொடர்ந்து இரண்டாவது கட்ட படப்பிடிப்பு ரஷ்யாவில் முக்கிய இடங்களில் நடைபெற உள்ளது. இதற்கான புகைப்படங்கள் கூட நெல்சன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து கொண்டார்.
இது ஒருபுறமிருக்க நெல்சனின் நீண்டகால நண்பராக இருக்கும் விஜய் டிவி பிரபலமும் சினிமா ஹீரோவுமான கவின் தளபதி 65 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

இப்படி ஒரு செய்தி வெளியாக காரணமே இன்று நடைபெற்ற தளபதி 65 படத்தின் பூஜை விழாவில் அவர் கலந்து கொண்டதுதான் என்கிறார்கள் தளபதி 65 வட்டாரங்கள். ஏற்கனவே கவின் டாக்டர் படத்தில் சிவகார்த்திகேயனுடன் நடித்துள்ளதாக ஒரு வதந்தி கிளம்பியது குறிப்பிடத்தக்கது. இருந்தாலும் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும்வரை பொறுத்திருந்து பார்க்க வேண்டியதுதான்.
