சமந்தா போல் நோயால் பாதிக்கப்பட்ட விஜய் டிவி பிரபலம்.. ஆறுதல் சொல்லி ஆச்சரியப்பட வைத்த சம்பவம்

சமந்தா போட்ட சமீபத்திய பதிவு ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியது. தென்னிந்திய மொழி படங்களில் டாப் நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை சமந்தா. தொடர்ந்து இவரது மார்க்கெட் உச்சத்தில் உள்ள நிலையில் ஒரு அரிய வகை நோயால் சமந்தா பாதிக்கப்பட்ட உள்ளார்.

அதாவது சமந்தா மயோசிடிஸ் என்னும் ஆட்டோ இம்யூன் பிரச்சனை தனக்கு இருப்பதாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார். மேலும் இந்த நோயின் பாதிப்பு தணிந்த பிறகு இதை பகிர்ந்து கொள்வதாக கூறியிருந்தார். இதைப் பார்த்த திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் சமந்தா மீண்டும் பூரண குணம்பெற்று வரவேண்டும் என கமெண்ட் செய்திருந்தனர்.

அதில் விஜய் டிவி பிரபலம் ஒருவர் என்னை போன்ற ஆட்டோ இம்யூன் பிரச்சனை உள்ள அனைவருக்கும் நீங்கள் ஒரு பெரிய முன்னுதாரணம். நீங்கள் மீண்டும் அதே வலிமையுடன் வர வேண்டும் என சமந்தாவிற்கு நம்பிக்கை கொடுத்திருந்தார். இவருக்கும் இந்த நோய் இருக்கிறதா என அவரது பதிவால் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.

அதாவது விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளினியான டிடி-க்கு ஆர்த்ரைடிஸ் பிரச்சனை இருப்பது அனைவரும் அறிந்தது தான். ஆனால் சமந்தாவிற்கு உள்ள ஆட்டோ இம்யூன் என்ற நோயும் இவருக்கு இருக்கிறது. இதுவரை டிடி அதை வெளிப்படுத்தியது இல்லை.

இந்த நோய் இருப்பவர்கள் நினைத்த நேரத்தில் நடனமாட, நடக்க சில நேரங்களில் மிகவும் கஷ்டப்படுவார்கள். அதேபோல் தற்போது சமந்தா, டிடி இருவருக்கு இந்த நோய் பாதிக்கப்பட்டுள்ளது. சமந்தா இதற்கான சிகிச்சை எடுத்து வந்தாலும், டிடி இந்த நோய்க்கான சிகிச்சையை மேற்கொள்ளவில்லை.

ஆனால் சமந்தாவுக்கு ஆறுதல் கூறுகையில், நம்மால் இந்த நோயை வெல்ல முடியும், ஆட்டோ இம்யூன் பிரச்சனையால் போராடும் எல்லோருக்கும் நீங்கள் தான் மிகப்பெரிய இன்ஸ்பிரேஷன் என டிடி கூறியுள்ளார். இப்போது சமந்தா மற்றும் டிடி இருவருமே இந்த நோயிலிருந்து சீக்கிரம் வெளிவர வேண்டும் என இவர்களது ரசிகர்கள் எண்ணுகிறார்கள்.