தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்கள் தற்போது வாய்ப்பு தேடி சீரியலுக்கு வந்துவிட்டனர். அந்த வகையில் கிட்டத்தட்ட 750 படங்களுக்கு மேல் நடித்த காமெடி நடிகர் ஒருவர் சின்னத்திரையில் வாய்ப்பு கேட்டு கதறி உள்ளாராம். இந்த செய்தி கோலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.
விஜய் டிவியின் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் மாரன், மாயன் என்ற இரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் மிர்ச்சி செந்தில் தன்னுடைய அசத்தலான நடிப்பை இந்த சீரியலில் வெளிக்காட்டிக் கொண்டிருக்கிறார். மேலும் இதில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு மாறன், மாயமாக மாறி பல்வேறு வேலைகளை செய்திருப்பார்.
அதற்கு பழிவாங்கும் விதமாக தற்போது மாயன், மாறன் ஆக மாறி மாறன் உடைய சிம்மில் இருந்து போலீசுக்கு போன் செய்து, மதுரை மாவட்டத்தில் குறிப்பிட்ட இடங்களில் குண்டு வைப்பதாக பேசியிருக்கிறார். இதனால் இந்த சிம் யாருடையது என்று கண்டறிந்த போலீசார் மாறனை கைது செய்கின்றனர்.
அதன் பிறகு மாறன் ‘நான் அல்ல’ என்று மாத்தி மாத்தி பேசியதாலும், ஏற்கனவே போலீசாரை தரக்குறைவாக பேசி கைது செய்து அதன் பிறகு மாயன் வக்கீலை வைத்து வெளியே எடுத்து இருப்பார். ஆகையால் இதை எல்லாம் வைத்து இவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று பைத்தியக்கார ஆஸ்பத்திரியில் சேர்த்து விடுகின்றனர்.
எனவே அந்த மனநல மருத்துவமனையில் குண்டு கல்யாண் ஒரு கதாபாத்திரமாக நடிக்கப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. எனவே திரையில் நீண்ட நாட்களாக பார்க்காத குண்டுகல்யாணம் விஜய்டிவி சீரியல் வாய்ப்பு கொடுத்து மீண்டும் ரசிகர்களுக்கு அவருடைய நடிப்பை வெளிக் காட்டுவதால் சோசியல் மீடியாவில் குண்டு கல்யாணத்துக்கு சின்னத்திரை ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
80களில் தமிழ் திரையுலகில் அறிமுகமான காமெடி நடிகர் குண்டு கல்யாணம், சுமார் 750 படங்களுக்கும் மேலாக தன்னுடைய நகைச்சுவையான நடிப்பை வெளி காட்டியவர். பொதுவாக வேடிக்கையான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து மக்களின் மனதில் இடம் பிடித்த குண்டு கல்யாண், சில ஆண்டுகளில் உடல்நலக்குறைவால் சினிமாவை விட்டு விலகி தற்போது மீண்டும் நடிக்க உள்ளார்.
இதுகுறித்து விஜய் டிவியின் முன்னணி சீரியல் ஆன நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலின் கதாநாயகன் மிர்ச்சி செந்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குண்டு கல்யாணம் உடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்டுள்ளார்.
