44 வயது சீரியல் நடிகருக்கு அம்மாவான 36 வயது நடிகை.. வசமாக சிக்கிய விஜய் டிவி பிரபலம்

An actress  plays a mother to a younger serial actor: முன்பெல்லாம் திரைப்படங்களில் தான் இந்த அக்கப்போரெல்லாம் நடக்கும், இப்போது சீரியலிலும் ஆரம்பிச்சுட்டாங்க. சின்னத்திரை ரசிகர்களை என்டர்டைன்மென்ட் செய்து கொண்டிருக்கும் விஜய் டிவி பல புதிய திருப்பங்களுடன் புதுப்புது சீரியல்களை ஒளிபரப்பு செய்கின்றனர். அந்த வகையில் கடந்த மூன்று வருடங்களாக உருட்டிக் கொண்டிருக்கும் பிரபல சீரியல் கதாநாயகன் இப்போது வசமாக சிக்கிக் கொண்டார்.

முன்பு தொகுப்பாளராக விஜய் டிவியில் ரவுண்டு கட்டிக் கொண்டிருந்த நடிகர் தீபக், இப்போது தமிழும் சரஸ்வதியும் சீரியலில் ஹீரோவாக நடிக்கிறார். இவருக்கு வயது 44. ஆனால் இந்த சீரியலில் கோதை கேரக்டரில் தமிழில் அம்மாவாக நடிக்கும் மீரா கிருஷ்ணனின் வயது வெறும் 36 தான். தன்னைவிட எட்டு வயது குறைவாக இருக்கும் நடிகையை சீரியலில் தீபக் வாய் கூசாமல் அம்மானு கூப்பிடுகிறார்.

மீரா கிருஷ்ணன் ‘மார்க்கம்’ என்ற மலையாள படத்தில் ஹீரோயினாக நடித்தவர். ஆனால் திருமணத்திற்கு பிறகு குடும்பத்தை கவனித்து வந்தார். இவரின் கணவரும் சினிமா நடன ஆசிரியர் தான். இரண்டு குழந்தைகள் பிறந்த பிறகு இப்போது மீராவுக்கு சின்னத்திரை வாய்ப்பு குவிகிறது.

8 வயது குறைவான சீரியல் நடிகருக்கு அம்மாவாக நடிக்கும் நடிகை

பொக்கிஷம், நாயகி, வந்தால் ஸ்ரீதேவி, சித்தி 2 போன்ற சீரியல்களில் அம்மாவாக கச்சிதமாக பொருந்தி நடித்த மீரா கிருஷ்ணன் வயது கம்மி என்றாலும், மூத்த நடிகருக்கு அம்மாவாக நடிப்பதை பெரிதாக பொருட்படுத்தவில்லை. அதிலும் தமிழும் சரஸ்வதியும் சீரியலில் தீபக்கை விட மீரா கிருஷ்ணன் எட்டு வயது கம்மி.

இது பத்தாது என்று இந்த முத்தின கத்திரிக்காவிற்கு இரண்டாவது கதாநாயகியாக மேக்னா என்ற கதாபாத்திரத்தையும் இப்போது நுழைத்திருக்கின்றனர். முன்பு அக்கடதேசத்து நடிகர் பாலையா படத்தில் தான் இப்படி எல்லாம் நடக்கும். ஆனால் இப்போது விஜய் டிவியில் சீரியலிலேயே இப்படியெல்லாம் நிகழ்வது வேடிக்கையாக இருக்கிறது.

இருப்பினும் தமிழும் சரஸ்வதியும் சீரியலில் கோதையாக நடிக்கும் மீரா சின்னத்திரையில் அம்மா கேரக்டரில் நோ சொல்லாமல் தொடர்ந்து நடித்து வருகிறார். இவர் வெள்ளித் திரையில் சரண்யா பொன்வண்ணன் போல் சீரியல்களில் அம்மா கேரக்டரில் சிறப்பாக நடித்து தனி முத்திரை பதிக்கிறார். இவருக்கு படங்களில் ஹீரோக்களின் அம்மாவாக நடிக்க வேண்டும் என்றாலும் டபுள் ஓகே தானாம்.