தளபதி 67 படத்தில் இணைந்த விஜய்-சியான் விக்ரம்.. இணையத்தில் லீக்கான ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம்

வாரிசு படத்திற்குப் பிறகு விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 67 படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த படத்தில் மும்பையைச் சேர்ந்த கேங்ஸ்டராக விஜய் நடிக்கிறார்.

இந்த படத்தில் விஜய்யுடன் இணைந்து திரிஷா நடிக்க உள்ளார். இந்த நிலையில் படத்தில் சியான் விக்ரம் நடிப்பது உறுதியாகியுள்ளது. விஜய் மற்றும் சியான் விக்ரம் இருவரும் ஷூட்டிங் ஸ்பாட்டில் லோகேஷ் முன்பு கட்டிப்பிடித்து இருக்கும் புகைப்படம் ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் வைரலாக பரவுகிறது.

ஏற்கனவே லோகேஷ் இடம் தளபதி 67 படத்தில் விக்ரம் இருக்கிறாரா என்ற கேள்வியை சமீபத்திய பேட்டியில் கேட்டபோது, ‘விரைவில் நீங்களே தெரிஞ்சுப்பீங்க. இப்பவே எல்லாத்தையும் சொல்லிட்டா சுவாரஸ்யம் இருக்காது’ என்று மூடி மறைத்தார்.

தற்போது தளபதி 67 படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படம் இணையத்தில் லீக் ஆனதால் விஜய்க்கு வில்லனாக விக்ரம் இந்தப் படத்தில் நடிக்கிறார் என்பது உறுதியானது. இதுமட்டுமின்றி  தளபதி 67 படத்தில் சஞ்சய் தத், கௌதம் மேனன், மன்சூர் அலிகான், அர்ஜுன், மிஷ்கின், விஜய் சேதுபதி போன்ற மிகப்பெரிய வில்லன் பட்டாளமே நடித்து வருகிறார்கள்.

இதனால் இந்த படத்தில் இடம்பெறும் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் பதம் பார்த்து பக்குவமாய் செதுக்கி கொண்டிருக்கிறாராம். மேலும் படப்பிடிப்பு துவங்குவதற்கு முன்பே 500 கோடி ப்ரீ சேல் ஆகி இருக்கும் தளபதி 67 படத்தில் விஜய்க்கு ஏகப்பட்ட வில்லன்களுடன் பிரம்மாண்டமாக எடுக்க லோகேஷ் திட்டமிட்டுள்ளார்.

ஒவ்வொரு நாளும் தளபதி 67 படத்தை குறித்து லோகேஷ் புது புது அப்டேட்டை கொடுத்து கொண்டிருக்கும் நிலையில். மரண மாஸ் ஆன அப்டேட் பிப்ரவரி  1,2,3 இல் ரிலீஸ் ஆகும் என்று அறிவிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். அதற்கு முன்பே தற்போது ஷூட்டிங் பாட்டில் விஜய், விக்ரமை இறுக்கி கட்டி பிடித்து இருக்கும் புகைப்படமும் தற்போது ரசிகர்களை மேலும் குதூகலப்படுத்தி உள்ளது.

விஜய்-சியான் விக்ரம் இருவரும் இணைந்திருக்கும் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம்

vikram-vijay-cinemapettai
vikram-vijay-cinemapettai