Actor Vijay: விஜய் தற்போது லியோ படத்தின் படப்பிடிப்பை முடித்த கையோடு அரசியலில் முழு நேர வேலையாக இறங்கியுள்ளார். ஏற்கனவே சமூக ரீதியான பல விஷயங்களை செய்து வந்தார். அதிலும் மாணவர்களை ஊக்குவித்து பரிசு தொகையை வழங்கி அவர்களுக்கு ஒரு நல்ல தலைவராக இருக்க முடியும் என்பதை நிரூபித்துக் காட்டி விட்டார்.
அந்த வகையில் தற்போது திரைப்படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டு மூன்று வருடத்திற்கு பிரேக் எடுக்கப் போறேன் என்று கூறியுள்ளார். ஏனென்றால் அந்த இடைவெளி நேரத்தில் முழுமையாக இவருடைய அரசியல் பிரவேசத்தை கையாள போகிறார். எந்த அளவிற்கு சினிமாவில் ஒரு நடிகராக ஜெயித்து காட்டினாரோ, அதேபோல் அரசியலிலும் ஜெயிக்க வேண்டும் என்பதுதான் இவருடைய லட்சியமாக இருக்கிறது.
மேலும் இன்று இவருடைய பனையூரில் மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் பொதுக்கூட்டம் ஒன்றை ஆரம்பித்தார். இதில் கலந்து பேசிய பிறகு மக்கள் இயக்க நிர்வாகத்தில் உள்ள பொறுப்பாளர்கள் விஜய்யின் அரசியல் வருகைக்கான அனைத்து கட்டமைப்புகளையும் செய்து விட்டோம். அவர் எப்பொழுது கை காட்டுகிறாரோ, அந்த நிமிஷமே நாங்கள் முழுவதுமாக அரசியல் ஈடுபட்டு விடுவோம் என்று கூறி வருகிறார்கள்.
அவர் அரசியலுக்கு வந்ததும் அவருடன் இணைந்து மக்களுக்காக பணியாற்ற தயாராக இருக்கிறோம். இதுதான் அவருடைய கொள்கையும் அதுவே பின்பற்றி எங்கள் தளபதியின் அரசியலை பிரவேசிக்க வைப்போம் என்று விஜய்யை சந்தித்த பிறகு உற்சாகமாக பேசி வருகிறார்கள்.
மேலும் அவர்கள் கூறியதில் விஜய் என்னதான் மக்களுக்காக பல விஷயங்களை செய்து வந்தாலும், இன்னொரு பக்கம் ரஜினி, அஜித்தை முழுமையாக நம்பி வருகிறார் என்பது தெரிகிறது. அதாவது ரஜினி, அஜித்தின் ரசிகர்களின் சப்போர்ட் மற்றும் அனைத்து ரசிகர்களின் ஆதரவும் எங்கள் தளபதிக்கு இருக்கிறது என்று கூறுகிறார்கள்.
அத்துடன் விஜய்யின் விசுவாசிகளாக இருக்கும் தொண்டர்கள் அனைவரும் முழுமையாக அரசியலில் வெற்றி கிடைத்து விடும் என்ற நம்பிக்கையில் பேசுகிறார்கள். மேலும் விஜய்யின் அரசியல் வேகத்தை பார்த்தால் ஜெயிக்காமல் விடமாட்டார் என்பது போல் தான் தெரிகிறது. அதற்கு ஏற்ப இவருடைய விசுவாசிகளும் ஓவராக தான் அலப்பறையே கூட்டி வருகிறார்கள்.