விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். சஞ்சய் தத், அர்ஜுன், திரிஷா உட்பட ஏராளமான நட்சத்திரங்கள் நடித்து வரும் அந்த படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதற்காக டெக்னீசியன்கள் அனைவரும் போர்க்கால அடிப்படையில் வேலை செய்து வருகின்றனர்.
அந்த அளவுக்கு லோகேஷ் உறைய வைக்கும் பனியிலும் தீவிரமாக உழைத்துக் கொண்டிருக்கிறாராம். இந்நிலையில் விஜய் இந்த படத்திற்கு பிறகு தான் நடிக்கும் படங்களை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்துக் கொள்ளும் முடிவில் இருக்கிறாராம். ஏனென்றால் இனிமேல் அவர் தன் அப்பா ஆசைப்படி நடக்கலாம் என்றும் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் ஆயத்தமாகி கொண்டிருக்கிறார்.
அதாவது விஜய் இந்த அளவுக்கு உயர்ந்ததற்கு அவருடைய அப்பா ஒரு முக்கிய காரணம் என்பதை யாராலும் மறுக்க முடியாது. தன் மகன் உச்ச நட்சத்திரமாக இருப்பதை தாண்டி அரசியலிலும் ஜொலிக்க வேண்டும் என்பதே எஸ் ஏ சந்திரசேகரின் பல வருட ஆசை. அதற்காக அவர் செய்த முயற்சியும் பலரும் அறிந்தது தான். ஆனால் அதுவே அப்பா, மகன் இருவருக்குள்ளும் மனக்கசப்பையும் ஏற்படுத்தியது.
தற்போது பழசையெல்லாம் மறந்துவிட்டு அப்பா ஆசைப்படி தீவிர அரசியலில் இறங்க விஜய் யோசித்து வருகிறாராம். ஏற்கனவே நற்பணி மன்றம் மூலம் பல விஷயங்களை செய்து வரும் விஜய் இதற்கான அறிவிப்பை விரைவில் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அது மட்டும் நடந்து விட்டால் நிச்சயம் தமிழக அரசியலையே அது கலங்கடிக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
இதற்கு முன்னதாக சூப்பர் ஸ்டார் அரசியலுக்கு வருவேன் என்று சொல்லி சொல்லி இறுதியில் ஜகா வாங்கினார். ஆனால் விஜய் அது போல் இல்லாமல் சரியான நேரம் பார்த்து என்ட்ரி கொடுக்க வேண்டும் என்று யோசித்து கொண்டிருக்கிறார். அதற்கான முக்கிய ஆலோசனைகளும் மறைமுகமாக நடந்து கொண்டு தான் இருக்கிறது.
அதன்படி தற்போது கசிந்திருக்கும் இந்த செய்தி விஜய் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக இருக்கிறது. ஏனென்றால் பல வருடங்களாக அவர்கள் இப்படி ஒரு விஷயத்தை தான் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் லியோ திரைப்படத்தின் வெளியீட்டிற்கு பிறகு இன்னும் பல சர்ப்ரைஸ்கள் வர இருப்பது குறிப்பிடத்தக்கது.