லியோ படத்தை இன்னும் மெருகேற்ற களமிறங்கும் விஜய்.. 1000 கோடி வசூல் கன்ஃபார்ம் தான் போல

Actor Vijay: லோகேஷ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள லியோ படம் வருகிற அக்டோபர் 19ஆம் தேதி திரையரங்குகளில் வர இருக்கிறது. எப்பொழுது இப்படம் ஆரம்பித்ததோ, அதிலிருந்து இப்படத்தை பார்ப்பதற்கு ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அதற்கு காரணம் லோகேஷ் கதை மற்றும் விஜயின் நடிப்பு.

அந்த வகையில் சமீபத்தில் வெளிவந்த “நா ரெடி தா வரவா” என்ற பாடல் வெளியாகி 24 மணி நேரத்திற்குள் 18 மில்லியன் பார்வையாளர்களை கவர்ந்திருக்கிறது. அந்த அளவிற்கு இப்பாடல்கள் ரசிகர்களுக்கு மிகவும் உற்சாகமாக அமைந்திருக்கிறது. இப்பாடலுக்கு என்னதான் சர்ச்சைகள் வந்திருந்தாலும், அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைத்து மற்ற வேலைகளில் படு ஜோராக இறங்கி விட்டார்.

அதாவது படப்பிடிப்பை முடித்த கையோடு அரசியலுக்காக செய்ய வேண்டிய சில வேலைகளையும் ஒரு பக்கம் பார்த்து வருகிறார். அந்த வகையில் மாணவர்களை சந்தித்து பரிசு வழங்குவது, பசி இல்லா திட்டத்தை போக்குவதற்காக உணவு அளித்தது இது போன்ற விஷயங்களை செய்து இவருடைய அரசியல் வாழ்க்கைக்கு அஸ்திவாரத்தை போட்டு வருகிறார்.

அடுத்ததாக மக்கள் இயக்க நிர்வாகத்தில் உள்ள தொண்டர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திருக்கிறார். இப்படி பரபரப்பாக எல்லா விதத்திலும் ரவுண்டு கட்டி வருகிறார். மேலும் லியோ படப்பிடிப்பு முடிந்ததால் அடுத்து வியாபார ரீதியாக பெருத்த லாபத்தை பார்க்க வேண்டும் என்பதற்காக களம் இறங்கி இருக்கிறார்.

அதற்காக இப்படத்தின் பிரமோஷனை நாடு நாடாக சென்று செய்ய இருக்கிறார். அதாவது லியோ படத்தை விளம்பரப் படுத்துவதற்காக செப்டம்பர் மாதம் மலேசியா செல்ல இருக்கிறார். இவருக்கு எல்லா நாடுகளிலும் ரசிகர்கள் குவிந்து இருக்கிறார்கள். இதனை இன்னும் வலுப்படுத்துவதற்காக அங்குள்ள மக்களை சந்தித்து பிரமோஷன் பண்ணப் போகிறார்.

அங்கு மட்டும் இல்லாமல் மலேசியா முடித்த கையோடு துபாய்க்கும் சென்று பிரமோஷன் செய்ய திட்டம் போட்டு இருக்கிறார். இவருடைய வேகத்தை பார்க்கையில் கண்டிப்பாக லியோ படத்தில் குறைந்தது 1000 கோடி வசூலையாவது பார்க்காமல் விடமாட்டார் போல. சும்மாவே இவருடைய ரசிகர்கள் விஜய்யை தூக்கி விடுவார்கள். இதுல இவர் நேரடியாக விளம்பரம் செய்தால் கன்ஃபார்மா 1000 கோடி லாபத்தை பார்த்து விடுவார்.