விஜய்யின் வாரிசு மற்றும் அஜித்தின் துணிவு படம் வருகின்ற பொங்கல் பண்டிகைக்கு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில் இப்போதே இந்த இரு படத்தைப் பற்றிய பேச்சு தான் இணையத்தில் தூள் பறக்கிறது. தமிழ்நாட்டை பொறுத்த வரையில் துணிவுக்கு தான் அதிக திரையரங்குகள் ஒதுக்கப்படுகிறது.
ஏனென்றால் அஜித்தின் துணிவு படத்தை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் வெளியிடுவதால் தமிழ்நாட்டில் இந்த படத்திற்கு தான் அதிக திரையரங்குகள் ஒதுக்க வேண்டும் என தியேட்டர் உரிமையாளர்களிடம் வேண்டுகோள் வைக்கப்பட்டுள்ளது. இதனால் வாரிசு படத்தின் வசூல் பெரிய அளவில் பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் வெளிநாடுகளை பொருத்தவரையில் விஜய்க்கு தான் மவுசு அதிகம். ஏனென்றால் விஜய் தனது பட ப்ரமோஷன் பிரம்மாண்டமாக செய்வார். அதுமட்டுமின்றி இவருக்கு எல்லா நாடுகளிலும் ரசிகர்கள் கூட்டம் அதிகமாக உள்ளது. ஆனால் அஜித்தை பொறுத்தவரையில் அவர் தமிழ்நாட்டில் தான் மாஸ்.
ஆனால் வெளிநாடுகளில் அந்த அளவு அவருக்கு மார்க்கெட் இல்லை. இதன் காரணமாக வெளிநாட்டில் அவருடைய படங்களுக்கு பெரிய அளவில் வரவேற்பு கிடைக்காது. இப்போது ரிலீசுக்கு முன்பே வெளிநாடுகளில் துணிவு மற்றும் வாரிசு படம் வியாபாரம் ஆகியுள்ளது. அந்த வகையில் UK நாடுகளில் வாரிசு படம் 53,100 பவுண்டுக்கு விற்பனையாகியுள்ளது. அதுவே துணிவு படம் 14,200 பவுண்ட் மட்டுமே விற்பனையாகி இருக்கிறது.
அதேபோல் அமெரிக்கா போன்ற இடங்களில் வாரிசு படம் 10,168 டாலருக்கு வியாபாரம் ஆகி உள்ளது. அங்கும் துணிவு படம் வாரிசை காட்டிலும் குறைவு தான். அதாவது 5,124 டாலருக்கு வியாபாரம் செய்துள்ளது. இவ்வாறு தமிழ்நாட்டில் துணிவு படத்தின் ஆதிக்கம் அதிகமாக இருந்தாலும் வெளிநாடுகளில் குறைவுதான்.
மேலும் வாரிசு படம் தமிழ்நாட்டில் வசூல் பாதித்தாலும் வெளிநாடுகளின் வசூல் மூலம் அதை ஈடு கட்டிவிடும் என சினிமா விமர்சகர்கள் கூறி வருகிறார்கள். இதன் மூலம் வெளிநாடுகளில் நம்பர் ஒன் இடம் விஜய்க்கு தான் என்று அவரது ரசிகர்கள் தற்போது மகிழ்ச்சியில் உள்ளனர்.