பிரம்மாண்ட தயாரிப்பாளரின் 100-வது படத்தில் கமிட்டான விஜய்.. லியோவை ஓரம் கட்ட வரும் தளபதி 68

சோசியல் மீடியாவை திறந்தாலே டாப் ஹீரோக்கள் பற்றிய செய்திகள் தான் அதிக அளவில் கவனம் ஈர்த்து வருகிறது. அதிலும் விஜய் தான் நம்பர் ஒன் ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறார். லியோ திரைப்படம் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்தே அது குறித்த அப்டேட்டுகள் தான் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

ஆனால் இப்போது அப்படத்தையே ஓரங்கட்டும் வகையில் தளபதி 68 படம் பற்றிய அப்டேட் களைக்கட்டிக் கொண்டிருக்கிறது. அதாவது லியோவுக்கு பிறகு விஜய் எந்த இயக்குனருடன் இணையப் போகிறார் என்ற விவாதம் கடந்த சில நாட்களாகவே சலசலப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. அதிலும் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அட்லி தான் விஜய்யின் அடுத்த படத்தை இயக்கப் போகிறார் என்று உறுதியாக கூறப்பட்டது.

ஆனால் சில தினங்களுக்கு முன்பு தெலுங்கு இயக்குனர் கோபிசந்த் விஜய்யிடம் கதை கூறி சம்மதம் வாங்கியிருப்பதாகவும் அதற்காக 130 கோடி அவருக்கு சம்பளம் பேசப்பட்டு இருப்பதாகவும் கூறப்பட்டது. இது அனைத்துமே அதிகாரப்பூர்வமற்ற செய்திகள் தான். இந்நிலையில் தற்போது வேறு ஒரு தகவல் இணையதளத்தை கலக்கிக் கொண்டிருக்கிறது.

அதாவது விஜய்யின் அடுத்த படத்தை சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிக்க இருக்கிறதாம். ஏற்கனவே இது குறித்த அதிகாரப்பூர்வமான தகவலை ஆர் பி சௌத்ரியின் மகன்களான ஜீவா மற்றும் ரமேஷ் இருவரும் கூறி இருந்தனர். மேலும் தங்கள் நிறுவனத்தின் நூறாவது படத்தில் விஜய் தான் நடிக்க வேண்டும் என்று தயாரிப்பாளரும் மிகுந்த ஆசைப்பட்டிருக்கிறார். அதற்கு விஜய்யும் சம்மதம் தெரிவித்து காத்திருக்க சொல்லி இருக்கிறார்.

அதைத்தொடர்ந்து பல இயக்குனர்களிடம் கதை விவாதம் நடத்தப்பட்டது. ஆனால் இயக்குனர் இன்னும் முடிவாகவில்லை என்று கூறப்பட்ட நிலையில் தற்போது கார்த்திக் சுப்புராஜின் கதையை தயாரிப்பு நிறுவனம் ஓகே செய்து வைத்திருக்கிறதாம். அது விஜய்க்கும் பிடித்து போகவே தற்போது இந்த கூட்டணியில் இணைய சந்தோஷத்துடன் அவர் சம்மதம் தெரிவித்து விட்டாராம்.

ஏனென்றால் அட்லிக்காக காத்திருந்தால் அது நிச்சயம் வீண் தான் என்பதை புரிந்து கொண்ட தளபதி இப்போது தனக்காகவே காத்துக்கொண்டிருக்கும் ஆர் பி சௌத்ரிக்கு ஓகே சொல்லி இருக்கிறார். அந்த வகையில் இந்த பிரம்மாண்ட கூட்டணியில் உருவாகும் தளபதி 68 பற்றிய அறிவிப்பு விஜய்யின் பிறந்த நாளன்று போஸ்டருடன் வெளிவர இருக்கிறது.