விஜய் தற்போது நடித்துக் கொண்டிருக்கும் லியோ திரைப்படம் முடியும் தருவாயில் இருக்கிறது. ஆனால் அதற்குள் அடுத்த படத்திற்கான அப்டேட்டுகளை வெளியிட்டு இவருடைய ரசிகர்களை குதூகலப்படுத்தி விட்டார். அதாவது தளபதி 68 படத்தை வெங்கட் பிரபு இயக்க இருக்கிறார். இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
அடுத்ததாக இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். மேலும் இப்படத்திற்காக விஜய் சம்பளமாக 200 கோடி வாங்க இருக்கிறார். மேலும் இப்படம் அடுத்த வருட கோடை விடுமுறையில் வெளிவர இருக்கிறது. இது போன்ற தகவல்கள் ஒவ்வொன்றாக வந்த நிலையில் தற்போது இப்படத்திற்கு டைட்டிலும் இதுவாகத்தான் இருக்கும் என்று வெளிவந்திருக்கிறது.
அதாவது நமக்கு ஏற்கனவே தெரியும் தளபதியும் தோனியும் எந்த அளவிற்கு நட்பு ரீதியாக பழகுகிறார்கள் என்று. இதற்கு முன்னதாகவே தோனி தயாரிப்பில் விஜய் நடிக்க இருக்கிறார் என்ற தகவல் வந்து ரசிகர்களை மிகவும் ஆரவாரப்படுத்தியது.
ஒரு பக்கம் விஜய்யின் ரசிகர்கள், இன்னொரு பக்கம் தோனியின் வெறித்தனமான ரசிகர்கள் இப்படி அனைவரும் இந்த ஒரு தருணத்திற்காக காத்துக் கொண்டிருந்த நிலையில் அது தகவல்களாகவே போய்விட்டது. ஆனால் தற்போது தளபதி 68 படத்திற்கும் தோனிக்கும் சம்பந்தமாக ஒரு செய்தி வெளியாகி சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வந்து கொண்டிருக்கிறது.
அதாவது தளபதி 68 படத்தின் டைட்டில் இதுவாக வைக்கலாமா என்று வெங்கட் பிரபு விஜய்யிடம் கேட்டிருக்கிறார். அப்படி என்ன டைட்டில் என்றால் CSK. இது முழுக்க முழுக்க தோனி மேல் இருக்கும் அளவு கடந்த நட்பை தெரிந்து கொண்டு அதை வைக்க தயாராக இருக்கிறார் வெங்கட் பிரபு. மேலும் ஐபிஎல் இன் பிரபலமான டீம் பெயர் என்பதால் சிஎஸ்கே என்ற டைட்டிலை வைக்கப் போவதாக தகவல் வெளியாகி வந்திருக்கிறது.
இதைக் கேட்ட பிறகு கண்டிப்பாக விஜய்யும் ஓகே சொல்வதற்கு 100 சதவீதம் வாய்ப்பு இருக்கிறது. அப்படி மட்டும் இருந்தால் தளபதி 68 டைட்டில் CSK வாகத்தான் இருக்கும். ஆனால் இது இன்னும் அதிகாரப்பூர் அறிவிப்புகளாக வெளிவரவில்லை. அப்படி மட்டும் வந்தால் ரசிகர்கள் அவர்களுடைய ஆர்ப்பாட்டத்தை சந்தோஷமாக வெளிப்படுத்தி வருவார்கள்.