அப்பாவை மொத்தமாக ஒதுக்கி வைக்கும் விஜய்.. ஆப்ரேஷனை கூட கண்டும் காணாமல் இருக்கும் தளபதி

Actor Vijay: விஜய் இன்று சர்வதேச அளவில் புகழ்பெற்ற ஒரு நடிகராக விளங்குகிறார். தற்போது அவருடைய நடிப்பில் வெளிவர இருக்கும் லியோ ஆயிரம் கோடி வசூலிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இப்படி மாஸ் ஹீரோவாக கலக்கிக் கொண்டிருக்கும் இவர் இந்த உயரத்தை அடைந்ததற்கு பின்னால் அவருடைய அப்பா தான் இருக்கிறார்.

தன் மகனுக்காக பல விஷயங்களை பார்த்து பார்த்து செய்த எஸ்.ஏ சந்திரசேகர் இப்போது வேண்டாத அப்பாவாக மாறி இருக்கிறார். கடந்த சில வருடங்களாகவே விஜய்க்கும் அவருடைய அப்பாவிற்கும் சுமூகமான உறவு இல்லை என்பது அனைவரும் அறிந்தது தான்.

Also read: ஜவான், லியோவால் பீதியில் 30 பட தயாரிப்பாளர்கள்.. மார்க் ஆண்டனி முதல் சந்திரமுகி 2 வரை தலை தப்புமா.?

இது கிசுகிசுப்பாக பேசப்பட்டாலும் கடந்த வருடம் எஸ் ஏ சந்திரசேகர் தன் மனைவியுடன் திருக்கடையூர் கோவிலுக்கு தனியாக சென்று சதாபிஷேக ஹோமம் நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பெற்ற மகன் இருந்தும் எதற்காக இவர்கள் இப்படி தனியாக வரவேண்டும் என்ற விமர்சனங்களும் ஒரு பக்கம் எழுந்தது.

அதைத்தொடர்ந்து வாரிசு இசை வெளியீட்டு விழாவில் தொடங்கி பல நிகழ்வுகள் இதை பெரும் சர்ச்சையாக மாற்றியது. இந்நிலையில் சமீபத்தில் உடல்நல பிரச்சினை காரணமாக எஸ்ஏ சந்திரசேகருக்கு ஆபரேஷன் நடைபெற்றது. இதை அவரே மீடியாவில் வெளிப்படையாக தெரிவித்திருந்தார்.

Also read: லியோ, தலைவர் 171-க்கு நடுவில் சம்பவம் செய்ய போகும் லோகேஷ்.. கூட்டணி போடும் அனிருத்

அது மட்டுமல்லாமல் சிறு பிரச்சினையால் தான் எனக்கு ஆபரேஷன் நடந்தது. இப்போது நான் நன்றாக இருக்கிறேன் என்றும் குறிப்பிட்டிருந்தார். அதைத்தொடர்ந்து தற்போது அவர் விரைவில் நலம் பெற வேண்டும் என்று ரசிகர்கள் முதல் அனைவரும் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

ஆனால் விஜய் மட்டும் தன் அப்பாவை கண்டும் காணாமல் இருக்கிறார். ஆப்ரேஷன் நடைபெற்ற பொழுது அமெரிக்காவில் இருந்த அவர் தற்போது சென்னை வந்துவிட்டார். இருப்பினும் அவர் எஸ் ஏ சந்திரசேகரை பார்க்காமல் இருப்பது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. என்ன மன வருத்தம் இருந்தாலும் இப்படி எல்லாம் செய்யலாமா என்ற விமர்சனங்களும் விஜய்க்கு எதிராக எழுந்து வருகிறது.

Also read: விஜய் பயந்த மாதிரியே எல்லாம் நடந்தது.. வெந்த புண்ணில் வேல்-ஐ பாய்ச்சும் வெங்கட் பிரபு