நடிகர் விஜயின் வாரிசு திரைப்படம் படப்பிடிப்பு இந்த வருடம் ஆரம்பிக்கப்பட்டபோது, பொங்கலன்று ரிலீசாகும் என படக்குழுவினர் அறிவித்தனர். அதற்கேற்றார் போல் இப்படத்தின் அப்டேட்களும் விறுவிறுப்பாக வந்த நிலையில் வாரிசு திரைப்படத்தை 2023 பொங்கலன்று ரிலீஸ் செய்யப்படுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.
இந்நிலையில் நடிகர் அஜீத் நடித்து வரும் துணிவு திரைப்படத்தை இந்த வருட தீபாவளி அன்று ரிலீஸ் செய்யலாம் என பிளான் செய்திருந்த படக்குழுவினர், படப்பிடிப்பு சற்று தாமதமானதால் எப்போது ரிலீஸ் செய்யலாம் என வெயிட் பண்ணி கொண்டு இருந்தனர். ஆனால் வாரிசு படம் பொங்கல் என்று அறிவித்திருந்தனர் இதனால் அஜித் தன் படத்தையும் பொங்கலுக்கு விட வேண்டும் என்று பிடிவாதமாக கூறிவிட்டார். வாரிசும், துணிவு திரைப்படமும் பொங்கலன்று ரிலீஸனால் தல, தளபதி திரைப்படங்கள் எட்டு வருடங்கள் கழித்து ஒரே நாளில் ரிலீசாகும் என ரசிகர்கள் மிகப்பெரிய எதிர்பார்ப்பை கொண்டு இருந்தனர்.
அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக துணிவு திரைப்படமும் பொங்கலன்று ரிலீஸ் செய்யப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதனிடையே நடிகர் விஜய் யாருடைய திரைப்படமும் வாரிசு படத்திற்கு போட்டியாக வெளியிடப்படாமல் இருந்ததால், தனிக்காட்டு ராஜாவாக அவரே அனைத்து வசூலையும் எடுத்துவிடலாம் என திட்டம் தீட்டியிருந்தார்.
இந்த திட்டத்திற்கு மண்ணை அள்ளி போடும் விதமாக நடிகர் அஜித்தின் துணிவு படம், வாரிசு படத்துடன் அதே நாளில் ரிலீஸாவதால் விஜயின் படத்திற்கு திரையரங்கு கூட கிடைக்காமல் படக்குழுவினர் தத்தளித்து வருகின்றனர். நடிகர் அஜித்தின் துணிவு திரைப்படத்தின் திரையரங்கு விநியோகஸ்தர் உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் வாங்கி உள்ள நிலையில், தமிழகத்தில் மட்டுமே 70 சதவீதத்திற்கும் மேற்பட்ட திரையரங்குகளில் துணிவு திரைப்படம் வாங்கப்பட்டுள்ளது
எஞ்சிய சில திரையரங்கை குறிவைத்து அங்கேயும் துணிவு படத்தை விநியோகம் செய்யலாம் என உதயநிதி ஸ்டாலின் அதற்கான வேலையில் மும்முரமாக இறங்கி உள்ளார். இந்த நிலையில் வாரிசு திரைப்படத்திற்கு திரையரங்குகள் கிடைக்காமல் சற்று தொய்வு ஏற்பட்டுள்ளது. இதனால் விஜய் என்ன செய்வதென்று புரியாமல் தனது ரசிகர்கள் மற்றும் ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் மாவட்டங்கள் தோறும் கூட்டங்கள் நடத்தி வருகிறார். இதுமாதிரி விஜய் எந்த படத்திற்கும் டென்ஷனாகி கூட்டங்களை கூட்டியது இதுவே முதல் முறை.
பொதுவாக நடிகர் விஜய்யின் திரைப்படங்கள் ஓடுகிறதோ, இல்லையோ அதிகமாக முதல் நாள் வசூல் கொடுக்கும் தென்னிந்தியா நடிகர் என்ற நம்பர் ஒன் இடத்தில இருப்பவர். ஆனால் நடிகர் அஜித்தின் துணிவு படத்தால் தனது நம்பர் ஒன் இடம் பறி போய்விடும் என விஜய் புலம்பி வருகிறாராம்.