தமிழ் சினிமாவின் உச்ச நாயகனாக இருக்கும் ரஜினி தன்னுடைய தனித்துவமான ஸ்டைலினால் வயது வித்தியாசம் இல்லாமல் அனைத்து ரசிகர்களையும் கட்டிப்போட்டு தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தை உருவாக்கியுள்ளார். இப்படிப்பட்ட சூழலில் ஆரம்ப கட்டத்தில் இருந்து தற்போது வரை விஜய், ரஜினி மாதிரியே காப்பி அடிக்கிறார் என்ற செய்திகள் வரும்.
அதே போல அவரும் செய்து வருகிறார். தற்போது விஜய் தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் உருவாகி இருக்கும் வாரிசு படத்தில் நடித்து முடித்து அந்தப் படத்தை பொங்கலுக்கு ரசிகர்களுக்கு விருந்தளிக்க காத்திருக்கிறார். இந்நிலையில் அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் 67 படத்தில் நடிக்க ரெடியாகிவிட்டார்.
இதனால் விஜய் 67 படத்தின் பூஜை வரும் 5-ஆம் தேதி நடைபெறுகிறது இது ஏவிஎம் ஸ்டூடியோவில் உள்ள விநாயகர் கோவிலில் நடைபெறுகிறது. விஜய் ஆரம்ப கட்டத்தில் ஏவிஎம் ஸ்டூடியோவில் உள்ள விநாயகர் கோவிலில் பூஜை செய்து இருப்பார் .
ஆனால் வளர்ந்த பிறகு பல வருடங்களாக அதை செல்வது இல்லை. எதற்காக திடீரென விஜய் 67 படத்தின் பூஜையை விநாயகர் கோயில் வைக்க வேண்டும் என்று தெரியவில்லை. இவருடைய இந்த திடீர் மாற்றத்திற்கு சூப்பர் ஸ்டார் தான் காரணம் என்று சொல்லப்படுகிறது.
ஆனால் ரஜினி அன்று முதல் இன்று வரை ஏவிஎம் ஸ்டூடியோவில் உள்ள விநாயகர் கோவிலில் பூஜை செய்து விநாயகரிடம் ஒரு டயலாக் பேசி படத்தை துவங்குவார். அது அவருடைய ஸ்டைல். இப்பொழுது இதையும் விஜய் காப்பி அடிப்பதால் சினிமா பிரபலங்கள் கிண்டலடித்து வருகின்றனர்.
ஏற்கனவே தளபதி விஜயின் நடிப்பில் கடைசியாக வெளியான பீஸ்ட் படம் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பு பெற்றாலும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாத படமாகவே மாறியது. அதன் பிறகு வாரிசு படமும் பக்கா சென்டிமெண்ட் படம் என்பதால், விஜய் 67 படத்தை தான் அவருடைய ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருப்பதால், அதை சிறப்பாக துவங்க வேண்டும் என ரஜினியின் ஸ்டைலை பின்பற்றியுள்ளார்.