Actor Vijay: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து முடித்துள்ள விஜய் இப்படத்தை பெரிதும் எதிர்பார்த்து வருகிறார். சொல்லப்போனால் அவர் நடித்த படங்களிலேயே மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பையும் அதிக வசூல் கணிப்பையும் ஏற்படுத்தி இருக்கும் படமும் இதுதான்.
அதனாலேயே விஜய் இப்படம் சம்பந்தப்பட்ட ஒவ்வொரு விஷயங்களிலும் தனி ஆர்வம் காட்டி வருகிறாராம். அந்த வகையில் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இருந்து ப்ரமோஷன் வரை அனைத்தையும் அவர் பக்கா பிளான் போட்டு செய்து கொண்டிருக்கிறார்.
அதில் தற்போது வெளியாகியிருக்கும் ஒரு விஷயம் தான் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக மாறியுள்ளது. அதாவது அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் உருவாகியுள்ள ஜவான் படம் வரும் செப்டம்பர் மாதம் வெளியாக இருக்கிறது. இதில் விஜய் ஒரு கேமியோ ரோலில் நடிக்கிறார் என்று சொல்லப்பட்டது.
ஆனால் இது தவறான தகவல் என்று கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது விஜய் இதில் நடித்திருக்கிறார் என்ற செய்தி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் பட குழு எக்காரணம் கொண்டும் இந்த விஷயம் வெளியில் தெரியக்கூடாது என்பதில் கவனமாக இருக்கின்றனர். இருப்பினும் தற்போது இந்த தகவல் மீடியாவில் பரவிக் கொண்டிருக்கிறது.
மேலும் ஜவான் படத்திற்கு அடுத்த மாதம் தான் லியோ படம் ரிலீஸ் ஆக இருக்கிறது. மேலும் இப்படம் 1000 கோடி வசூலிக்கும் முதல் தமிழ் படம் என்ற கருத்து கணிப்புகளும் பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கிறது. இதையெல்லாம் மனதில் வைத்து தான் விஜய் ஷாருக்கான் படத்தில் கேமியோ ரோலில் நடிக்க சம்மதித்திருக்கிறார்.
இதன் மூலம் பாலிவுட் ரசிகர்களை தன் பக்கம் இழுக்கவும் அவர் திட்டமிட்டுள்ளார். அப்பொழுதுதான் லியோ படத்திற்கான எதிர்பார்ப்பு இன்னும் அதிகரிக்கும். அந்த வகையில் விஜய் இப்போது மாஸ்டர் பிளான் போட்டு தன் பட ப்ரமோஷனை ஜவான் படத்திலிருந்து ஆரம்பித்துள்ளார்.