சின்ன கவுண்டர்ல சும்மா குடை பிடிக்கிற கேரக்டர் தான்.. திறமை இருந்தா திமிரும் இருக்குமோ, திருந்தாத வடிவேலு

Vadivelu: சில காலங்கள் நடிப்பில் இருந்து விலகி இருந்த வடிவேலு மீண்டும் பிஸியாகிவிட்டார். மாமன்னன், சந்திரமுகி 2 படங்கள் தொடங்கி தற்போது கேங்கர்ஸ் படத்தில் நடித்து முடித்துள்ளார்.

பல வருட இடைவெளிக்கு பிறகு மீண்டும் சுந்தர் சி யுடன் அவர் இணைந்துள்ளார். வரும் 24ஆம் தேதி வெளியாக இருக்கும் இப்படத்தின் பிரமோஷன் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.

அதை முன்னிட்டு வடிவேலு பல சேனல்களுக்கு இன்டர்வியூ கொடுத்து வருகிறார். அதில் தனக்கு ஆரம்ப காலகட்டத்தில் கிடைத்த வாய்ப்புகள் பற்றி அவர் ஒரு பேட்டியில் குறிப்பிட்டு இருந்தார்.

திருந்தாத வடிவேலு

சின்ன கவுண்டர் பட வாய்ப்பு உதயகுமாரால் கிடைத்தது. ஹீரோவுடன் டிராவல் பண்ணும் படியான அடுத்தடுத்து 10 படங்கள் கிடைத்ததும் அவரால் தான்.

சின்ன கவுண்டர் படத்தில் வேட்டி சட்டை வாங்கி கொடுத்தது பற்றி எல்லாரும் பேசுகிறார்கள். ஆனால் அது வெறும் குடை பிடிக்கிற கேரக்டர் தான்.

இரண்டு வேட்டி ஒரு பனியன். அதையும் புரொடியூசர் தான் வாங்கி கொடுத்தார் என மறைமுகமாக கேப்டன் தனக்கு எந்த உதவியும் செய்யவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் அவரை தெரிந்த எல்லோருக்கும் தெரியும் இந்த பட வாய்ப்பு கேப்டனால் மட்டுமே வந்தது என்று. அவர் இறந்த பின்பும் கூட வடிவேலு இப்படி வன்மமாக பேசுவது இணையவாசிகளை டென்ஷன் ஆக்கி இருக்கிறது.

சில பேரை யாராலும் திருத்த முடியாது. திறமை இருந்தால் திமிரு இருக்கும் என்பதற்கு இவரும் ஒரு உதாரணம். முன்பெல்லாம் வடிவேலுவை பார்த்தாலே சிரிப்பு வரும்.

ஆனால் இப்போது அவரைப் பார்த்தாலே கோபம் தான் வருது. இவர் ஒரு நயவஞ்சகர் என கமெண்ட் பாக்ஸில் ரசிகர்கள் தங்கள் கோபத்தை கொட்டி வருகின்றனர்.