விஜய்யின் அரசியலுக்கு கிடைக்கும் ஆதரவு.. கேப்டனும் ஒரு காரணம், எப்படி.?

Vijay: விஜய் கட்சி தொடங்கியது அரசியல் வட்டாரத்தில் ஒரு சலசலப்பை ஏற்படுத்தியது. அதை அடுத்த அவருடைய ஒவ்வொரு நகர்வும் மீடியாக்களின் கவனத்தை பெற்றது.

அதேபோல் அவர் எது செய்தாலும் குறை சொல்வதற்கு என்று ஒரு கூட்டம் இருக்கிறது. அது மட்டும் இன்றி மத்திய மாநில ஆளும் கட்சியை அவர் விமர்சிப்பதில் தொடங்கி தன் அரசியல் எதிரி யார் என்பதை கூறியது வரை எல்லாமே ஃபயர் தான்.

ஆரம்பத்திலிருந்து அவருக்கு ஆதரவு இருந்து வந்த நிலையில் தற்போது அது இன்னும் அதிகரித்து இருக்கிறது. சமீபத்தில் அவர் கோவைக்கு வந்தபோது கண்கூடாக பார்த்தோம்.

ஆனால் அரசியல்வாதி என்பதை தாண்டி நடிகரை பார்க்க வேண்டும் என கூடிய கூட்டமாக கூட இருக்கலாம். அதே போல் அவருக்கு தேர்தலில் இதே போன்று ஆதரவு இருக்குமா என்றெல்லாம் தெரியவில்லை.

விஜய்யின் அரசியலுக்கு கிடைக்கும் ஆதரவு

இருப்பினும் அவருக்கு மக்கள் மத்தியில் ஒரு செல்வாக்கு உருவாகிவிட்டது. இதற்கு கேப்டனும் ஒரு காரணம் என்பதில் சந்தேகம் இல்லை. விஜயகாந்த் அரசியலுக்கு வந்தபோது இதே போன்ற ஆதரவு கிடைத்தது.

எதிர்க்கட்சித் தலைவர் என்ற அந்தஸ்தில் கூட அவர் இருந்தார். ஆனால் தமிழ்நாட்டில் இருக்கும் முக்கிய இரு கட்சிகள் அவரை குடிகாரர் கோமாளி என சித்தரித்து ஓரங்கட்ட பார்த்தது.

இதற்கு மீடியாக்கள் தான் ஒரு முக்கிய காரணம் என்பதை சொல்லி தெரிய வேண்டியது இல்லை. பல இடங்களில் ரசிகர்களும் தொண்டர்களும் இதை பதிவு செய்து இருக்கின்றனர்.

அப்படி ஒரு நிலை விஜய்க்கு வரக்கூடாது என்ற கவலை கூட மக்களுக்கு இருக்கிறது. புது மாற்றம் வரவேண்டும் என இளைஞர்கள் மட்டுமல்ல நடுத்தர வர்க்கத்தினர் கூட எதிர்பார்க்க தொடங்கி இருக்கும் காலகட்டம் தான் இது.

அதனால் அவர் வர இருக்கும் தேர்தலில் நிச்சயம் ஒரு மாற்றத்தை ஏற்படுத்துவார். அதேபோல் ஆட்சியைப் பிடிப்பாரா என்பது மக்கள் கையில்தான் இருக்கிறது.

ஆனால் நிச்சயம் ஆளும் கட்சிக்கு ஒரு தலைவலியாக இருக்கிறார் என்பது மட்டும் உண்மை. விஜயகாந்துக்கு கொடுக்காத ஆதரவை இவருக்கு கொடுப்போம் என்ற மக்களின் மனநிலையும் இதற்கு ஒரு காரணம்.