கேப்டன் விஜயகாந்த் திடீரென ஏற்பட்ட உடல்நல கோளாறு காரணமாக பல வருடங்களாக செயல்பட முடியாமல் அவதிப்பட்டு வருகிறார். இதனால் வெளியில் வர முடியாமல் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கிறார். இதற்காக வெளிநாட்டுகளில் பல சிகிச்சை எடுத்தும் பயனளிக்கவில்லை.
அவரின் தற்போதைய நிலைமையை பார்த்து கேப்டனின் ரசிகர்கள் மற்றும் மக்கள் வருத்தப்பட்டு வருகிறார்கள். மீண்டும் அவர் பழையபடி எப்போது வருவார் என்று காத்திருக்கிறார்கள். இந்நிலையில் விஜயகாந்தின் இந்த நிலைமைக்கு அதிகமாக மது அருந்தியது தான் காரணம் என சிலர் கூறி வந்தனர்.
ஆனால் இயக்குனர் பிரவீன் காந்த் இந்த நிலைமைக்கான காரணம் என்ன என்பதை கூறியிருக்கிறார். அதாவது கடந்த 2015 ஆம் ஆண்டு விஜயகாந்தின் உயிருக்கு உயிரான நண்பரான ராவுத்தர் இறந்து விட்டார். அவர் இறந்த போது நானும் அங்கே தான் இருந்தேன். ராவுத்தர் இறுதிச் சடங்குக்கு விஜயகாந்த் வந்திருந்தார்.
அப்போது அவரின் உடலைப் பார்த்து அழ கூட முடியாமல் தன்னை மறந்து அவரையே பார்த்துக் கொண்டு மௌனமாக இருந்தார். அதாவது ராவுத்தர், விஜயகாந்த் மிக நெருங்கிய நண்பர்களாக இருந்தனர். இந்த சூழலில் நண்பர்களுக்குள் வரும் பிரச்சனை போல இவர்கள் இருவருக்கும் ஏதோ சின்ன மனஸ்தாபம் ஏற்பட்டுள்ளது.
ஆகையால் இவர்கள் பேசிக்கொள்ளாமல் இருக்கும்போது ராவுத்தர் இறந்து விட்டார். எனவே அவர் இருக்கும்போது விஜயகாந்த், தான் கூட இல்லையே என்று மிகப்பெரிய அளவில் மனதளவில் பாதிப்பு ஏற்பட்டது. மேலும் தன்னுடைய வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்த நண்பனை இழந்து விட்டோமே என்று நினைத்து விஜயகாந்த் இந்த நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளார்.
இந்நிலையில் மீண்டும் விஜயகாந்த் பழைய நிலைமைக்கு வர வேண்டும் என்றால் அவருடைய நண்பர் ராவுத்தர் உயிருடன் இருக்கிறார் என்பதை அவருக்கு நம்ப வைக்க வேண்டும். இதை வெளிநாடுகளில் சில முயற்சிகளில் செய்து வெற்றி பெற்று இருக்கிறார்கள். விஜயகாந்துக்கும் அதேபோல் சிகிச்சை அளித்து குணம் செய்ய வேண்டும் என பிரவீன் காந்த் கூறியிருக்கிறார்.