ரஜினியின் 10 ஹேர் ஸ்டைலை உருவாக்கிய விஜய்யின் தம்பி.. இப்ப வரை பெருமை பேசும் தருணம்

Rajini Hair Style: ஆள் பாதி ஆடை பாதி முக்கியம் என்று சொல்வார்கள். ஆனால் அதையெல்லாம் தகர்த்தெறியும் வகையில் திறமை இருந்தால் முன்னுக்கு வந்துவிடலாம் என்பதற்கு உதாரணமாக ஜெயித்துக் காட்டியவர் தான் ரஜினி. சூப்பர் ஸ்டார் யார் என்று கேட்டால் சின்ன குழந்தைகள் கூட சொல்லும் என்பதற்கு ஏற்ப பல ஸ்டைல்களை உருவாக்கி அனைவரது மனதிலும் இடம் பிடித்துவிட்டார்.

அதாவது பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளிவந்தது எந்திரன் படம். இதில் ரோபோட் ஆகவும், விஞ்ஞானியாகவும் பல சாகசங்களை செய்து காட்டியிருப்பார். அதற்கு ஏற்ற மாதிரி ஒவ்வொரு கெட்டப்பையும் வித்தியாசமாக காட்ட வேண்டும் என்பதில் சங்கர் ரொம்பவே மெனக்கீடு செய்திருக்கிறார்.

அந்த சமயத்தில் இவருக்கு உதவி இயக்குனராக இருந்தவர் தான் விஜய்யின் தம்பி அட்லி. அப்படி இவர் அந்த படத்தில் வேலை செய்து பார்க்கும் பொழுது உருவம் தான் சிறுசு ஆனால் திறமை பெருசு என்பதற்கு ஏற்ப தற்போது வளர்ந்து காட்டியிருக்கிறார். இவர் எந்திரன் படத்தில் உதவி இயக்குனராக இருந்த பொழுது சின்ன சின்ன வேலைகளையும் நுணுக்கமாக செய்து பல பாராட்டுகளை வாங்கி இருக்கிறார்.

அதில் ஒன்றுதான் எந்திரன் படத்தில் ரஜினிக்கு உருவாக்கிய ஹேர் ஸ்டைல். அதாவது அட்லீ இடம் சங்கர் ரஜினிக்கு வித்தியாசமான 10 ஹேர் ஸ்டைல் வேண்டும் என்று கேட்டிருக்கிறார். அதற்கு ஏற்ற மாதிரி சங்கர் மனதில் எப்படி ஒரு மாற்றத்தை எதிர்பார்த்து இருந்தாரோ அதை கரெக்டாக செய்யும் விதமாக பத்து ஹேர் ஸ்டைலை ரெடி பண்ணி கொடுத்து இருக்கிறார் அட்லி.

இந்த ஒரு விஷயத்தை சாதாரணமாக பார்க்க முடியாது. ஏனென்றால் எந்திரன் படத்தில் ஒவ்வொரு சின்ன விஷயங்களும் தான் மிகப்பெரிய பிரம்மாண்டமாக பேசப்பட்டது. அதில் முக்கியமான ஒன்றுதான் அவருடைய வித்தியாசமான ஹேர் ஸ்டைல். அந்த படத்திற்கு ரஜினிக்கு மிகவும் செட்டாகும் அளவிற்கு திருப்தியாக அட்லீ பண்ணி கொடுத்திருக்கிறார்.

இப்ப வரை ரஜினிக்கு அந்த ஒரு ஹேர் ஸ்டைல் ரொம்பவே பிடித்து போய்விட்டது. அதனால் இப்ப வரை அந்த ஹேர் ஸ்டைலை மாத்தாமல் இருக்கிறார் என்று அட்லி தற்போது வரை பெருமையாக பேசி கொள்கிறார். எந்த ஒரு விஷயத்தையும் முழு மனதுடன் செய்தால் கண்டிப்பாக அதற்கான ரிசல்ட் கிடைக்கும் என்று சொல்வார்கள். அதற்கு ஏற்ற மாதிரி உதவி இயக்குனராக அட்லி செய்த ஒரு விஷயம் தற்போது வரை அவருக்கு ஒரு மறக்க முடியாத தருணமாக அமைந்து வருகிறது.