அஜித்தை பத்தி இனி யாரும் வாயைத் திறக்க கூடாது.. அரசியல் லாபத்திற்காக விஜய் போட்ட கண்டிஷன்

விஜய் நடிப்பில் வரும் ஆயுத பூஜை ரிலீசுக்காக தயாராகிக் கொண்டிருக்கும் லியோ படத்தைக் காட்டிலும் இப்போது தளபதியின் அரசியல் பிரவேசம் பற்றிய அப்டேட் தான் பரபரப்பாக பேசப்படுகிறது. அதிலும் இவர் ஒவ்வொரு முறையும் பனையூர் அலுவலகத்தில் விஜய் மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் கலந்தாலோசித்து பல முக்கிய முடிவுகளை எடுத்திருக்கிறார்.

முன்பை விட விஜய்யின் அரசியல் பயணம் அதிவேகம் எடுப்பதால் வரும் 2026 ஆம் ஆண்டு நடைபெறப் போகும் தேர்தலில் களம் இறங்க தயாராகிக் கொண்டிருக்கிறார். இதற்கிடையில் தமிழகத்தில் இருக்கும் ஒவ்வொரு ஓட்டும் முக்கியம் என்பதை அவருடைய ரசிகர்களுக்கு அதிரடியான அறிவிப்பின் மூலம் புரிய வைத்துள்ளார்.

சினிமாவில் விஜய், அஜித் ரசிகர்கள் கேவலமாக சண்டை போட்டுக் கொள்வார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். தற்போது விஜய் ரசிகர்களுக்கு புதிய கட்டளையை கூறியுள்ளார். அதாவது இனிமேல் அஜித்தை பற்றி யாரும் தவறாக பேசக்கூடாது.

சமூக வலைதளங்களிலும், போஸ்டர் அடிப்பதிலும் படங்கள் வெளியானாலும் அஜித்தை பற்றி ஒரு வார்த்தை கூட தவறாக பேசக்கூடாது. இதற்கு காரணம் அஜித்தின் ரசிகர்கள் மதுரை மற்றும் திருச்சி, திருநெல்வேலி இன்னும் சில மாவட்டங்களில் அதிக அளவில் இருக்கிறார்கள்.

இவர்களையும் தன் பக்கம் இழுக்க வேண்டும். அதனால் அஜித் ரசிகர்களிடம் நண்பர்கள் மாதிரி பேசுங்கள், அவரையும் கொண்டாடுங்கள் எனக் கூறியுள்ளார். அரசியலுக்காக அஜித் ரசிகர்களின் ஓட்டுக்களை வாங்க விஜய் போட்ட கட்டளை தளபதி ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திடீர்னு விஜய் அஜித்தை பற்றி வாய் திறக்க கூடாது என ஸ்டிட்டாக கண்டிஷன் போடுவது அரசியல் லாபத்திற்காக மட்டும் தான். ஆனால் பல வருடங்களாக திரையரங்குகளில் தல, தளபதி ரசிகர்கள் மோதிக்கொண்ட நிலையில் திடீரென்று அவர்களுக்குள்ளே ஒற்றுமையை ஏற்படுவது எப்படி சாத்தியமாகும் என கோலிவுட்டே பெரும் பரபரப்பில் இருக்கிறது.