Vijay : விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் ஜனநாயகன் படத்தின் வீடியோ இன்று வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெற்றிருக்கிறது. இந்த படத்தில் அவர் போலீஸ் அதிகாரியாக நடித்த இருப்பது தெரிய வந்திருக்கிறது. மேலும் ஜனநாயகன் படம் அரசியல் கதை சார்ந்த படமாக எடுக்கப்பட்டுள்ளது.
விஜய் 2026 ஆம் ஆண்டு வருகின்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுகிறார். அதற்காக இப்போது முழுக்க முழுக்க அரசியலில் ஈடுபட இருக்கிறார். விஜய் இந்த படத்துடன் சினிமா பயணத்தை முடித்துக் கொள்வது ரசிகர்களுக்கு வேதனை அளிக்கிறது.
இதுகுறித்து விஜய் மேடைப்பேச்சுகளில் பேசும்போதும் சினிமாவில் மிகப்பெரிய உயரத்தை விட்டுவிட்டு மக்களுக்காக வந்துள்ளேன் என்று கூறினார். அப்படி என்றால் இனி சினிமாவில் நடிக்க மாட்டார் என்ற ஏக்கம் தான் ரசிகர்களை தொற்றிக் கொண்டது.
சினிமாவில் தொடர்ந்து நடிப்பது குறித்து விஜய்யின் முடிவு
ஆனால் விஜய்யின் பிறந்தநாளான இன்று ஜனநாயகன் படத்தில் கதாநாயகியாக நடிக்கும் மமிதா பைஜூ ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்தார். அப்போது படப்பிடிப்பு தளத்தில் ஜனநாயகன் படம் தான் உங்களது கடைசி படமா என்று மமிதா விஜய் இடம் கேட்டாராம்.
அதற்கு வருகின்ற 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் முடிவு பொருத்தே அதன் பின்பு படங்களில் நடிப்பதா என்ற முடிவு எடுப்பேன் என விஜய் கூறினாராம். விஜய் இப்படி சொல்லி இருப்பது மிகப்பெரிய ட்விஸ்ட் ஆக இருக்கிறது.
அதாவது தேர்தலில் விஜய் வெற்றி பெற வேண்டும் என்பது தான் ரசிகர்களின் விருப்பம். அவ்வாறு வெற்றி பெற்றால் படங்களில் நடிப்பது கடினம். ஒருவேளை தோற்றால் மீண்டும் படங்களில் நடிக்கலாம் என்று முடிவில் விஜய் இருக்கிறார் போல.