விஜய் தன்னுடைய ஆரம்ப காலகட்டங்களில் இருந்து பெரும்பாலும் ஸ்டைலிஷ் ஆக்சன் என்டர்டைன்மென்ட் படங்களையே தேர்ந்து எடுத்து வருகிறார். ஆனால் அவருடைய குடும்ப சென்டிமென்ட் திரைப்படங்களை ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கின்றனர்.
விஜய் என்னதான் துப்பாக்கி போன்ற ஸ்டைலிஷ் படங்களில் நடித்தாலும் இன்றும் தளபதி ரசிகர்களை மட்டுமல்லாமல் குடும்ப ரசிகர்களையும் கவர்ந்து வருவது கில்லி, திருப்பாச்சி, சிவகாசி, பூவே உனக்காக போன்ற படங்கள்தான்.
இவ்வளவு ஏன் விஜய் நடிப்பில் வெளியான வேலாயுதம் படம் கூட அவருடைய அந்த கஷ்டமான காலகட்டங்களில் மிகப்பெரிய வசூலை குவித்து அவருடைய மார்க்கெட் மீண்டு வர உதவியது குறிப்பிடத்தக்கது. இப்போதும் சென்டிமென்ட் படங்களுக்கு நல்ல வசூல் கிடைக்கிறது.
உதாரணத்துக்கு கடைக்குட்டி சிங்கம், நம்ம வீட்டு பிள்ளை, விஸ்வாசம் போன்ற படங்களை சொல்லலாம். ஆனால் ஏன் விஜய் மீண்டும் குடும்ப படங்களில் நடிக்க ஆர்வம் காட்டுவதில்லை என்பது குறித்து ஒரு தகவல் கிடைத்துள்ளது.
விஜய் தற்போது இந்திய சினிமா மார்க்கெட்டுக்கு குறி வைத்துள்ளாராம். இனி தமிழ்நாட்டில் விஜய் நடித்தால் அந்த படம் கண்டிப்பாக 100 கோடிக்கு மேல் வசூல் செய்யும் என்பது உறுதி. அதேபோல் மற்ற மாநில ரசிகர்களையும் கவர வேண்டுமென்றால் ஸ்டைலிஷ் பாதைக்குத் திரும்பி ஆக்ஷன் அதிரடி ஹீரோவாக மாற வேண்டும் என்று ஆசைப்படுகிறாராம்.
விஜய்யின் கடைசி சில படங்கள் மற்ற மாநிலங்களிலும் ஹிந்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதால் அடுத்தடுத்து அந்த மார்க்கெட்டை தக்க வைத்துக்கொள்ள விஜய் இந்த முடிவை எடுத்துள்ளாராம். ஒருவேளை தமிழ் ரசிகர்களுக்கு ஏற்றவாறு பக்கா கமர்சியல் குடும்ப திரைப்படம் செய்தால் மற்ற மாநிலங்களில் அடிவாங்கும் என்ற பயமும் அவருக்கு இருக்கிறதாம்.
ஆனால் இப்போதும் தளபதி ரசிகர்களுக்கு ஒரு ஆசை. விஜய், ஹரி இயக்கத்தில் வெள்ளை வேட்டியை வரிந்து கட்டிக் கொண்டு அருவாளை கையில் எடுத்து வரவேண்டும் என்பதுதான். அப்படி இல்லை என்றாலும் தற்சமயம் பக்கா கமர்சியல் இயக்குனராக இருக்கும் பாண்டிராஜ் இயக்கத்தில் ஒரு படம் நடிக்க வேண்டும் எனவும் எதிர்பார்க்கின்றனர். கொஞ்சம் பாத்து பண்ணுங்க தளபதி.
