Vijay : பெரும்பாலும் அரசியலுக்கு வரும் பிரபலங்கள் சினிமாவில் மவுசு குறைந்தால் அல்லது வயது முதிர்வுக்குப் பிறகு வருவதுண்டு. ஆனால் கேரியரின் உச்சத்தில் இருக்கும்போதே விஜய் அதை தூசி என தூக்கி போட்டு மக்களுக்காக வருவது தான் மிகவும் பாராட்டப்பட வேண்டிய விஷயம்.
அதுவும் தற்போது ஒரு படத்திற்கு 270 கோடி சம்பளம் பெற்று வருகிறார். இப்படி இருக்கும் சூழலில் ஜனநாயகன் படத்துடன் தனது சினிமா கேரியரை முடித்துக் கொண்டிருக்கிறார். ஆனால் விஜய் சினிமாவில் தொடர்ந்திருந்தால் லைன் அப்பில் பல படங்கள் வரிசை கட்டி இருக்கிறது.
லோகேஷின் எல்சியுவில் லியோ 2 படம் உள்ளது. அடுத்ததாக விஜய்யின் ஆஸ்தான இயக்குனரான அட்லீ உடன் ஒரு படம் பண்ணுவதாக சொல்லப்பட்டது. இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க இருந்தது.
விஜய்க்கு லைன் அப்பில் இருந்த படங்கள்
அதோடு மட்டுமல்லாமல் ஷாருக்கான் தயாரிப்பில் அட்லீ டைரக்ஷனில் விஜய் நடிப்பதாக மற்றொரு படமும் இருந்தது. மேலும் வெங்கட் பிரபு Goat Vs OG படத்தை எடுக்க இருந்தார்.
இதையெல்லாம் காட்டிலும் வெற்றிமாறன் விஜய்யை வைத்து ஒரு படம் எடுக்க வேண்டும் என்று நினைத்தார். ஆனால் அந்த ஆசை கடைசி வரையில் நிறைவேறாமல் போய்விட்டது. விடாமுயற்சியை எடுத்த மகிழ்திருமேனி விஜய்க்காக கனவு படம் ஒன்றை வைத்திருந்தார்.
அந்தப் படமும் கனவாகவே போய்விட்டது. மேலும் இயக்குனர்கள் ராஜ்குமார், அஸ்வத் மாரிமுத்து என பல இயக்குனர்கள் விஜய்யை வைத்து படம் எடுக்க காத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் மக்கள் சேவை தான் முக்கியம் என்று இவையெல்லாம் தூக்கிப்போட்டு விட்டு விஜய் அரசியலில் இறங்கிவிட்டார்.