ஒட்டு மொத்த கவனத்தைப் பெற்ற மாணவன்.. விஜய் செய்த செயல்

விஜய் எந்த அளவுக்கு சினிமாவில் முன்னணியில் இருக்கிறாரோ அதற்கு இணையாக சமூக அக்கறையும் கொண்டவர். அதை செயல்படுத்தும் விதமாக தான் மக்கள் இயக்கம் மன்றத்தை ஆரம்பித்து இவருடைய ரசிகர்கள் மூலமாக பல்வேறு பொது அக்கறையான விஷயங்களை நடத்தி வருகிறார்.

அந்த வகையில் இந்த வருடம் 12ஆம் வகுப்பு முடித்த மாணவர்களில் முதல் மூன்று இடங்களில் பிடித்த மாணவர்களின் மாவட்டம் வாரியாக தேர்ந்தெடுத்து அந்த மாணவர்களை கௌரவிக்கும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் முதல் மூன்று இடங்களை பிடித்தவர்களுக்கு நடிகர் சங்கம் சார்பாக பரிசு வழங்கியுள்ளார். இந்த செய்தி சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.

அடுத்ததாக கிருஷ்ணகிரியை சேர்ந்த கீர்த்தி வர்மா என்ற மாணவன் அவருடைய இரண்டு கைகளையும் இழந்த நிலையிலும் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதி 437 மதிப்பெண்களை எடுத்து அந்தப் பள்ளியில் முதலிடம் பெற்று எல்லாரையும் அசத்திருக்கிறார். இவருடைய தன்னம்பிக்கையான செயல்களை பலரும் பாராட்டியதோடு இந்த மாணவனுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அவருடைய வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

அத்துடன் அந்த மாணவனுக்கு கைகள் பொருந்த என்னென்ன நடவடிக்கைகள் எடுக்க முடியுமோ அதை எடுத்து கூடிய விரைவில்  அவருக்கு கைகள் பொருத்தப்படும் என்று உறுதியாக தெரிவித்து இருக்கிறார். இந்நிலையில் இந்த மாணவனுக்கு விஜய்யின் சார்பாக மக்கள் இயக்கத்தினர் வாழ்த்துக்களை தெரிவித்திருந்தனர்.

ஆனால் விஜய் அந்த மாணவனை நேரில் சந்திக்க விரும்பியதால் அதற்கான ஏற்பாடுகளை ரசிகர்களிடம் செய்யுமாறு சொல்லி இருக்கிறார். அதனால் கூடிய விரைவில் அந்த மாணவனை சந்தித்து ஊக்கப்படுத்தி கண்டிப்பாக அவருக்கு தேவையான விஷயங்களை செய்யப் போகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

எத்தனையோ நடிகர்கள் அரசியலுக்கு வர வேண்டும் என்று தற்போது துடித்துக் கொண்டிருக்கும் நிலையில் அரசியலுக்கு வருவதற்கு முன்னாடியே இவரால் முடிந்த நிறைய நல்ல விஷயங்களை செய்வதை பார்க்கும் பொழுது இதுவே இவர் அரசியலில் வருவதற்கான எல்லா தகுதியும் வளர்த்துக் கொண்டிருக்கிறார் என்று தெரிகிறது. விஜய் இந்த மாதிரியான செய்கிற நல்ல விஷயங்களை பார்க்கும் பொழுது ஒட்டுமொத்த மாணவர்களின் கவனமும் இவர் பக்கம் திரும்புகிறது.