திரைத்துறையில் தன் திறன்பட்ட நடிப்பால் தனக்கென்று ஒரு சாம்ராஜ்யத்தை உருவாக்கியவர் தான் நடிகர் சிவாஜி கணேசன். நடிகர் திலகம் என கொண்டாடப்படும் இவர் தன்னுடைய நவரச நடிப்பாலும் மற்றும் கம்பீரமான குரலாலும் மக்களின் மனதில் நீங்காது இடம் பிடித்தவர்.
அந்த வகையில் இவரின் நடிப்பை பாராட்டாதவர்களே இருக்க முடியாது. எந்த கதாபாத்திரத்தை கொடுத்தாலும் அந்த கதாபாத்திரமாகவே மாறி நடிக்கும் தன்மை கொண்டவர். இவருக்குப்பின் தமிழ் சினிமாவில் எத்தனையோ கதாநாயகர்கள் வந்திருக்கலாம். ஆனால் இவரிடம் இருக்கும் தனித்துவம் தான் மக்களிடையே பேரும் புகழையும் பெற்று தந்தது.
அது மட்டுமின்றி நடிப்பில் எத்தகைய ஆர்வம் இருந்தால் இயக்குனர் கூறும் நேரத்திற்கு முன்பாகவே அவர் படப்பிடிப்பிற்கு வந்திருப்பார் என பலரும் சிந்திக்கும் அளவிற்கு தன் அர்பணிப்பை சினிமாவிற்கு தந்திருக்கிறார். இதுபோன்ற பண்புகள் ஒரு சிலரிடம் மட்டுமே காணப்படும். அதில் சிவாஜிக்கு பின் இதுபோன்ற ஒரு பண்பு விஜய்யிடம் இருந்திருக்கிறது.
அதற்கு உதாரணமாக ஒரு சம்பவத்தை சொல்லலாம். அதாவது 2002ல் வெளிவந்த பகவதி படத்தை இயக்கிய ஏ வெங்கடேஷ் விஜய் பற்றிய ஒரு விஷயத்தை கூறியிருக்கிறார். என்னவென்றால் மேட்டுப்பாளையத்தில் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தபோது அவர் சொன்ன நேரத்துக்கு முன்பாகவே விஜய் சூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்து விட்டாராம்.
இத்தனைக்கும் இயக்குனர் காலை 8.30 மணிக்கு ஷூட்டிங் ஆரம்பிக்கும், நீங்கள் 9.30க்கு வந்தால் போதும் என்று கூறி இருக்கிறார். ஆனாலும் விஜய் இயக்குனர் வருவதற்கு முன்பே அதாவது 8 மணிக்கே வந்து காத்திருந்தாராம். அதை கண்டு வெங்கடேஷ் ஆச்சரியப்பட்டதாக தெரிவித்துள்ளார். மேலும் தான் ஒரு நடிகன் என்ற கர்வம் கொள்ளாது படக்குழுவினரோடு எளிதாக பேசி பழகும் மனம் கொண்டவர் விஜய் என்றும் கூறியிருக்கிறார்.
தனக்கு நடிக்க வராத இடங்களில் இயக்குனரிடம் நீங்கள் நடித்துக் காட்டுங்கள் என்று கூறி அதன் பின்னால் அதை உள்வாங்கி நடிக்கும் ஆற்றல் கொண்டவர். இத்தகைய பண்பும், குணமும் தான் இவருக்கு தளபதி என்ற பெயரை பெற்று தந்தது. மேலும் நடிகர் திலகத்தின் இந்த குணத்தை இப்போது வரை கடைபிடித்து வருவதால் தான் விஜய் இன்று மிகப்பெரும் ரசிகர்கள் கூட்டத்தை தனக்கு சொந்தமாக்கிக் கொண்டிருக்கிறார்.