இன்று வரை தன்னுடைய ஸ்டைலால் தமிழ் சினிமாவில் மார்க்கெட்டை உயர்த்தி வருகிறார் ரஜினிகாந்த். இருப்பினும் பல இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் இவரை வைத்து படம் எடுக்க ஆர்வம் காட்டி தான் வருகிறார்கள். இந்நிலையில் இவரை முறியடிக்கும் முயற்சியில் விஜய் ஈடுபட்டு வருவது ஆச்சரியத்தை அளிக்கிறது.
தன்னுடைய அப்பாவின் சிபாரிசில் நடிக்க வந்தவர் இவர் தன்னுடைய கடும் உழைப்பால் இத்தகைய இடத்தை பிடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 2019ல் அட்லி இயக்கத்தில் வெளிவந்த படமான பிகில் படம் நல்ல விமர்சனத்தை பெற்று சுமார் 250 கோடி வசூலை பெற்றது. இந்நிலையில் விஜய் இப்படத்திற்கு 80 கோடியை சம்பளமாக பெற்றாராம்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 2021ல் விஜய் நடிப்பில் மாபெரும் ஹிட் கொடுத்த படம் தான் மாஸ்டர். 180 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் சுமார் 300 கோடி வசூலை பெற்று தந்தது. ஆகையால் இப்படத்திற்கு சுமார் 100 கோடியை சம்பளமாக பெற்றாராம் விஜய்.
அதற்குப்பின் நெல்சன் இயக்கத்தில் 2022-ல் விஜய்யின் மாறுபட்ட நடிப்பில் வெளிவந்த படம் தான் பீஸ்ட். பிரம்மாண்டமாக, நவீன தொழில்நுட்பத்துடன் எடுக்கப்பட்ட இப்படம் சுமார் 250 கோடி வசூலை பெற்று தந்தது. இப்படத்தில் விஜய்யின் சம்பளம் 115 கோடியாம்.
அதன்பின் சமீபத்தில் வெளிவந்த வாரிசு படத்தில் விஜய் 125 கோடியை சம்பளமாக பெற்றாராம். இவ்வாறு தன்னுடைய படத்தின் வெற்றிக்கு தகுந்தவாறு தன் சம்பளத்தை ஏற்றுக் கொண்டே போகிறார். இருப்பினும் இவரை வைத்து படம் எடுக்கத்தான் ஆசைப்பட்டு வருகிறார்கள் தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்கள்.
அவ்வாறு இருக்க தற்போது படப்பிடிப்பு முடிந்து வெளிவர இருக்கும் லியோ படத்தில் இவரின் சம்பளம் 150 கோடியாம். அதன் பின் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய்யின் 68 படத்திற்கு சுமார் 200 கோடி சம்பளமாக பெறுவார் என நம்பப்படுகிறது. இவ்வாறு ஏறுமுகமாக இருக்கும் இவரது சம்பளம் ரஜினியை ஓரம் கட்டவும் வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.