அஜித்தின் வெற்றி கூட்டணியை இணையவிடாமல் செய்த சதி.. இயக்குனருக்கு கட்டளை போட்ட விஜய்யின் மாமா.!

அஜித்தின் ஏகே 62 படத்தின் அறிவிப்பு எப்போது வரும் என்று ரசிகர்கள் காத்திருந்து வெறுத்து போய் உள்ளனர். ஆரம்பத்தில் அஜித் துணிவு படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போதே விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஏகே 62 உருவாக உள்ளதாக லைக்கா அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது.

ஆனால் விக்னேஷ் சிவனின் கதை லைக்கா மற்றும் அஜித்துக்கு பிடிக்காததால் அவரை நிராகரித்து விட்டனர். அதன் பிறகு வேறு ஒரு இயக்குனருக்கு ஏகே 62 வலை வீசி உள்ளது. அப்போது தான் அஜித் தனக்கு மாபெரும் ஹிட் படத்தை கொடுத்த விஷ்ணுவர்தனை லைக்காவிடம் சிபாரிசு செய்துள்ளார்.

அதாவது விஷ்ணுவர்தன், அஜித் கூட்டணியில் பில்லா, ஆரம்பம் போன்ற படங்கள் வெளியாகி வெற்றி பெற்றுள்ளது. லைக்காவும் இதற்கு சம்மதம் தெரிவித்துவிட்டதாம். மேலும் விஷ்ணுவர்தனும் பல வருடம் காத்திருப்புக்கு கிடைத்த வரம் என அஜித் படத்தை இயக்க உச்சகட்ட மகிழ்ச்சியில் இருந்து உள்ளார்.

ஆனால் அதற்கு முட்டுக்கட்டையாக இருந்துள்ளார் விஜய்யின் மாமா சேவியர் பிரிட்டோ. இவர் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்தை தயாரித்தவர். இவர் முரளியின் மகன் ஆகாஷின் மாமனார் ஆவார். இந்நிலையில் சேவியர் பிரிட்டோ விஷ்ணுவர்தன் இயக்கத்தில் தன் மருமகனை கதாநாயகனாக நடிக்க வைக்க அட்வான்ஸ் கொடுத்துள்ளார்.

ஆனால் அப்போது கொரோனா காலகட்டம் என்பதால் படம் எடுக்க முடியாமல் போய்விட்டது. அதன் பிறகும் ஒரு சில காரணங்களினால் படம் தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது. அஜித் படத்தை விஷ்ணுவர்தன் இயக்குகிறார் என்ற விஷயம் தெரிந்த உடன் தன்னுடைய மருமகன் படத்தை எடுக்க சொல்லி டார்ச்சர் செய்தாராம்.

விஷ்ணுவர்தன் பல வருடம் காத்திருப்புக்கு பின் அஜித் பட வாய்ப்பு கிடைத்துள்ளது. அந்த படத்தை முடித்துவிட்டு உங்கள் படத்தை இயக்குகிறேன் என்று கூறியுள்ளார். யார் படமாக இருந்தாலும் இந்த படத்தை முடித்துக் கொடுத்துவிட்டு போ என்று விஜய் மாமா கூறியதால் ஏகே 62 வின் வாய்ப்பு விஷ்ணுவர்தனுக்கு கிடைக்காமல் போனது.

அதன் பிறகு தான் மகிழ்திருமேனி ஏகே 62 படத்தின் இயக்குனராக உள்ளார். மேலும் விஷ்ணுவர்தன், ஆகாஷ் முரளி இணையும் படத்தின் அறிவிப்பு அடுத்த வாரம் வெளியாக இருக்கிறது. ஆனால் இன்னும் ஏகே 62 படத்திற்கான அறிவிப்பு வந்த பாடு இல்லை.