Vijay Sethupathi : விஜய் சேதுபதி, ருக்மணி வசந்த் ஆகியோர் நடிப்பில் உருவாகி இருக்கிறது ஏஸ் படம். விஜய் சேதுபதி மகாராஜா என்ற பிளாக்பஸ்டர் ஹிட் படத்தை கொடுத்த நிலையில் ஏஸ் படமும் அந்த வரிசையில் இடம் பெறும் என்று நம்புகிறார்.

இந்த படத்தைப் பற்றிய ட்விட்டர் விமர்சனத்தை தற்போது பார்க்கலாம். மலேசியா பின்னனி கொண்ட படத்தில் விஜய் சேதுபதி நகர்ப்புற தோற்றத்தில் இருக்கிறார். யோகி பாபு மற்றும் விஜய் சேதுபதி காம்போ நகைச்சுவையை கொடுத்துள்ளது.

உருகுது பாடல் அருமையாக இருக்கிறது. ஆனால் கதை ரசிகர்களை திருப்தி படுத்த தவறியது. விஜய் சேதுபதி யோகி பாபு கூட்டணியில் உருவாகும் ஒரு நேர்த்தியான பொழுதுபோக்கு படம். கதை ஆரம்பிக்கவே சிறிது நேரம் எடுக்கிறது.

ருக்மணி வசந்த் தனது தமிழ் அறிமுக படத்தில் நன்றாக நடித்திருக்கிறார். ஒரு நல்ல பொழுதுபோக்கு கொண்ட டைம் பாஸ் படம். விஜய் சேதுபதி கிளாஸ் மற்றும் மாசாக நடித்திருக்கிறார். யோகி பாபுவின் கெமிஸ்ட்ரி நன்றாக உள்ளது.

ருக்மணி தனது கதாபாத்திரத்தை நேர்த்தியாக நடித்துள்ளார். சாம் பின்னணி இசை பக்காவாக அமைந்திருக்கிறது. விஜய் சேதுபதி நடிப்பில் ஒரு நகைச்சுவையான கதையாக ஏஸ் படம் அமைந்துள்ளது.