தள்ளிப்போகும் தங்கலான் ரிலீஸ்.. கௌதம் மேனனுடன் சேர்ந்து டபுள் ட்ரீட் கொடுக்க தயாராகும் விக்ரம்

Actor Vikram: பா.ரஞ்சித், விக்ரம் கூட்டணியில் உருவாகி இருக்கும் தங்கலான் மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. கோலார் தங்க சுரங்கத்தில் வாழும் மக்களின் சொல்லப்படாத கதையாக எடுக்கப்பட்டுள்ள இப்படத்தின் ஷூட்டிங் முடிந்த நிலையில் தற்போது இறுதி கட்டப் பணிகள் நடந்து வருகிறது.

இதற்கு சிறிது கால தாமதம் ஆகும் என்பதால் பட ரிலீஸ் அடுத்த வருடத்திற்கு தள்ளிப் போயிருக்கிறது. அதன் காரணமாகவே விக்ரமின் பார்வையும் இப்போது கெளதம் மேனன் பக்கம் திரும்பி இருக்கிறது. இவர்களின் கூட்டணியில் கடந்த 2017ல் துருவ நட்சத்திரம் ஆரம்பிக்கப்பட்டது.

Also read: இயக்குனரின் கேரியரை குழி தோண்டி புதைத்த கௌதம் மேனன்.. உண்மையை உடைத்த பிரபலம்

ஆனால் பல்வேறு சிக்கலின் காரணமாக கிடப்பிலேயே கிடந்த இப்படம் எப்போது தான் ரிலீஸ் ஆகும் என ரசிகர்கள் எதிர்நோக்கி வருகின்றனர். கௌதம் மேனனும் அதற்கான முயற்சியில்தான் இப்போது இருக்கிறார். இந்நிலையில் இப்படம் இரண்டாம் பாகமாக உருவாக இருக்கிறதாம்.

அதாவது விக்ரம் சமீபத்தில் படத்தை முழுமையாக பார்த்திருக்கிறார். பார்த்ததுமே அவருக்கு பரம சந்தோஷமாக இருந்திருக்கிறது. அந்த அளவுக்கு ஒவ்வொரு காட்சியும் திருப்திகரமாக வந்திருப்பதாக கௌதம் மேனனிடம் சொல்லி அவர் ஆர்ப்பரித்திருக்கிறார்.

Also read: நானும் பான் இந்தியா ஹீரோ தான் என விக்ரம் தொடங்கிய 62வது படம்.. வெற்றி இயக்குனருடன் கூட்டணி

அது மட்டுமல்லாமல் இந்த படம் வெற்றி அடைந்தால் நிச்சயம் இரண்டாம் பாகம் எடுக்க வேண்டும். அதில் நான்தான் ஹீரோவாக நடிப்பேன் என்று அன்பு கட்டளையே போட்டு விட்டாராம். அதைத்தொடர்ந்து இயக்குனரும் தற்போது பார்ட் 2-க்கான கதையை தயார் செய்யும் வேலையை ஆரம்பித்திருக்கிறார்.

ஏற்கனவே இப்படத்திலிருந்து வெளிவந்த பாடல்கள் யாவும் நல்ல வரவேற்பை பெற்றது. இதில் இரண்டாம் பாகமும் வர இருப்பது எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி உள்ளது. அந்த வகையில் கௌதம் மேனனுடன் சேர்ந்து விக்ரம் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் கொடுக்க தயாராகி விட்டார்.

Also read: விக்ரம் போல கட்டுமஸ்தானாக மாறிய துருவ் விக்ரம்.. மாரி செல்வராஜ் வெளியிட்ட புகைப்படம்