சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தர்பார் படத்தின் கலவையான விமர்சனங்களுக்கு பிறகு நடித்துள்ள திரைப்படம் அண்ணாத்த. அஜித்துக்கு விஸ்வாசம் என்ற மிகப்பெரிய வெற்றி கொடுத்த சிறுத்தை சிவா இந்த படத்தை இயக்கி வருகிறார்.
சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு இமான் இசையமைத்து வருகிறார். மொத்த படப்பிடிப்புகளும் முடிந்துவிட்ட நிலையில் ஒரு சில காட்சிகள் சரியாக வராததால் மேலும் ஒரு வாரம் படப்பிடிப்பை நடத்த உள்ளதாம் படக்குழு.

மேலும் வருகின்ற நவம்பர் 4 ஆம் தேதி தீபாவளியை முன்னிட்டு அண்ணாத்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்து விட்டது. ஆனால் ரஜினி படத்திற்கு முன்பே தீபாவளிக்கு வர ஆசைப்பட்டவர் தல அஜித் தான்.
வலிமை படத்தை முதலில் தீபாவளி ரிலீசாக தான் பிளான் செய்தார்களாம். ஆனால் ரொம்ப நாள் கழித்து அஜித் படம் வெளியாவதால் வசூல் ரீதியாக பாதிப்பை ஏற்படுத்தும் என கருதி தீபாவளி போட்டியில் இருந்து விலகி விட்டாராம் தல.
அதைப்போல் தான் விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் இருவரும் இணைந்து நடிக்கும் சீயான் 60 படமும் தீபாவளியை குறி வைத்து உருவாகி வந்தது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கி வரும் இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார்.
இந்நிலையில் விக்ரம் தன்னுடைய தயாரிப்பாளரிடம் தீபாவளியில் ரஜினியுடன் மோத வேண்டாம் என முடிவெடுத்து சீயான் 60 படத்தை நவம்பர் மாத இறுதியில் ரிலீஸ் செய்யலாம் என கேட்டுக் கொண்டாராம். விக்ரமும் கடந்த சில வருடங்களில் தன்னுடைய ரேஞ்சுக்கு ஒரு பெரிய வெற்றி கிடைக்காமல் தடுமாறி வருகிறார்.

இந்நிலையில் தேவையில்லாமல் வேறு ஒரு முன்னணி நடிகருடன் போட்டி போட வேண்டாம் என்பதையும் கருத்தில் கொண்டு இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறுகின்றனர்.