வீரதீரசூரன் படம் நாளை ரிலீஸ் ஆகிறது. விக்ரம் ரசிகர்கள் மட்டுமல்லாது மொத்தமாய் விக்ரமும் நம்பி இருக்கும் படமும் இதுதான். அவர் ஹிட் படங்கள் கொடுத்து பத்து ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. கடாரம் கொண்டான், கோப்ரா, மகான், ஏன் தங்களான் படம் கூட அவருக்கு பிளப்பாக அமைந்தது.
இப்படி இருக்கும் பட்சத்தில் அருண்குமார் இயக்கத்தில் உருவாகி உள்ள வீரதீரசூரன் படம் தான் விக்ரமை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும், அதற்கு ஏற்றார் போல் இந்த படமும் ஏகபோக வரவேற்பை பெற்று வருகிறது. ட்ரெய்லர் மற்றும் டீசர் இரண்டும் வெளியாகி பட்டையை கிளப்பி உள்ளது.
இப்பொழுது எடுத்திருக்கும் படம் பாகம் 2 என்கிறார்கள். இதற்குப் பின் பாகம் 3 தான் எடுக்க வேண்டும். இந்த பாகத்தில் முற்றிலுமாய் குழப்பியுள்ளார் அருண்குமார். வீரதீர சூரன் கிளைமாக்ஸ் இல் பாகம் 3க்கு லீடு கொடுத்துவிட்டு, பாகம் ஒன்று எடுக்கப் போகிறாராம். மேலும் இந்த பாகத்தை எடுக்க கொஞ்சம் அவகாசமும் கேட்டிருக்கிறார்.
இதனால் விக்ரம் அடுத்த படத்தின் கதைகளை கேட்டு வருகிறார். தன்னுடைய கெட்டப்பை மாற்றி மண்டேலா படத்தின் இயக்குனர் மடோன் அஸ்வின் உடன் கூட்டணி போட உள்ளார். அதனால் அடுத்த கட்டமாக முதலில் வீர தீர சூரன் படத்தின் முதல் பாகம் தான் வெளிவர உள்ளது.
மேலும் இரண்டாம் பாகத்தில் மூன்றாம் பாகத்திற்கு லீடு கொடுத்ததால் இது மூன்று பாகமாக வெளிவரும் என்பதில் சந்தேகம் இல்லை. எப்படி பார்த்தாலும் இந்த படம் நாளை வெளியாகிய மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று விடும் என்பது தெரிகிறது. முதல் பாகம் வருவதற்கு இன்னும் 6 முதல் 8 மாதங்கள் ஆகிவிடும்.