கமல்ஹாசன் நடிப்பில் அடுத்ததாக அனைவரும் மிகவும் எதிர்பார்க்கும் திரைப்படம்தான் விக்ரம். சிஷ்யன் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக இருப்பதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக உள்ளது.
அதற்கு தகுந்தார்போல் அனிருத்தின் பின்னணி இசையில் விக்ரம் படத்தின் டைட்டில் டீசரும் வெளியாகி மாபெரும் வெற்றியைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. ஆனால் திட்டமிட்டபடி விக்ரம் படம் தொடங்குவதில் பல சிரமங்கள் ஏற்பட்டன.
தற்போது அதை எல்லாம் முடித்துவிட்டு மீண்டும் விக்ரம் படத்தில் நடிக்க கமல் சுறுசுறுப்பாக களத்தில் இறங்கிவிட்டார். மேலும் படத்தில் சண்டை பயிற்சி இயக்குனராக அன்பறிவு, ஒளிப்பதிவாளராக கிரிஷ் கங்காதரன் என தொடர்ந்து தினமும் விக்ரம் படத்தை பற்றி அப்டேட்டுகள் வந்து கொண்டிருக்கின்றன.
இதற்கிடையில் கமல்ஹாசனுக்கு வில்லனாக கிட்டத்தட்ட நான்கு நடிகர்கள் நடிக்க உள்ளதாக செய்தி ஒன்று கோலிவுட் வட்டாரத்தில் உலா வருகிறது. அதில் ஒருவர் பகத் பாசில் என்பது ஏற்கனவே தெரிந்த செய்திதான்.

கைதி படத்தில் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்த நரேன் முகமூடி படத்திற்கு பிறகு மீண்டும் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளாராம். அதனை தொடர்ந்து விஜய் சேதுபதியும் இந்த படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறுகின்றனர்.
இந்நிலையில் இன்று வெளியான விக்ரம் படத்தின் போஸ்டர் ஏற்கனவே கமல் இயக்கத்தில் வெளியான விருமாண்டி படத்தின் போஸ்டர் உடன் ஒப்பிட்டு ரசிகர்கள் இணையத்தில் கலாய்த்து வருகின்றனர்.
