மகிழ் திருமேனி படத்தின் காப்பி தான் விக்ரம் படமா.? அட்லி போல காப்பி கதையில் சிக்கிய லோகேஷ்

கடந்த ஆண்டு உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் விக்ரம் படம் வெளிவந்து பல சாதனைகளைப் பெற்று தற்போது லோகேஷ் கனகராஜ் விஜய் வைத்து லியோ படத்தை எடுத்து வருகிறார். இந்த படத்தில் டைட்டில் மற்றும் ரிலீஸ் தேதி அடங்கிய ப்ரோமோ வீடியோ நேற்று சோசியல் மீடியாவில் வெளியீட்டு ட்ரெண்டாக்கிக் கொண்டிருக்கின்றனர்.

இந்த நிலையில் லோகேஷுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தக் கூடிய செய்தி ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் வைரலாக பேசப்படுகிறது. அதாவது பாக்ஸ் ஆபிஸில் 500 கோடியை வாரி குவித்த விக்ரம் படம் மகிழ் திருமேனி எடுத்த மீகாமன் படத்தின் காப்பி அடித்து எடுத்துள்ளார் என தற்போது கூறி வருகின்றனர்.

2014 ஆம் ஆண்டு ஆர்யா, ஹன்சிகா மோட்வானி நடிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் மீகாமன் திரைப்படம் வெளியானது. என்னதான் படத்தின் கதை நன்றாக இருந்தாலும் மீகாமன் படம்  வெற்றி பெறவில்லை. அதில் உள்ள கதை அதில் உள்ள கதாபாத்திரங்களை சொல்லி விக்ரம் படத்தில் அப்படியே இருக்கிறது என குறிப்பிட்டு கூறி வருகின்றனர்.

தற்பொழுது எதற்காக இந்த பிரச்சனை வந்துள்ளது என பார்த்தால் லோகேஷ் கனகராஜ் இயக்கும் விஜய்யின் 67வது படமான லியோ படத்தை ஆரம்பித்துள்ளார். தற்போது காஷ்மீரில் படப்பிடிப்பு விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில், இப்படி ஒரு பேச்சு மீடியாவில் பரபரப்பாக பேசப்படுகிறது.

ஏனென்றால் அஜித் 62 படத்தை மகிழ் திருமேனி இயக்க இருக்கிறார். இதனால் லோகேஷ் கனகராஜ் அசிங்கப்படுத்த ரசிகர்கள் இந்த செயலை செய்து வருகின்றனர். அதேபோல் அப்பொழுது மீகாமன் படத்தை பற்றி பேசாதீர்கள். அப்படியெல்லாம் இல்லை என லோகேஷ் டென்ஷன் ஆகிறார்.

ஏனென்றால் லோகேஷின் உலகமே வேறு. அவருடைய படங்களில் எல்லாம் ஹீரோக்களை ஆட, பாடவிட்டு ஹிட் கொடுக்க நினைக்க மாட்டார். நடிகர்களின் உணர்ச்சி பூர்வமான நடிப்பை தூண்டிவிட்டு அதன் மூலம் ஹிட் கொடுக்க நினைப்பவர் தான் லோகேஷ்.

அப்படி இருக்கும்போது மகிழ் திருமேனியின் மீகாமன் படத்தை காப்பி அடித்தது தான் விக்ரம் என்பது சுத்த பொய். விக்ரமுக்கு பிறகு தற்போது லோகேஷின் லியோ படத்தின் ப்ரோமோஷன் வீடியோவை வைத்து பார்த்தாலே தெரியவில்லையா லோகேஷ் எவ்வளவு பெரிய சினிமா வெறியர் என்று. அவரை மற்ற இயக்குனர்கள் போலவே அட்டகாப்பி அடிக்கிறார் என்பதை பலரும் எதிர்கின்றனர்.

குறிப்பாக அட்லி எடுக்கும் படங்கள் எல்லாம் பழைய படங்களின் அட்டகாப்பி என்ற பேச்சு பரவலாக பேசப்படும் நிலையில், லோகேஷுன் அப்படி தான் என்ன சொல்வது யாராலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இப்படி தேவையில்லாத வதந்தியை கிளப்ப வேண்டாம் என்று கண்டனங்களும் வலுக்கிறது.