மாநகரம், கைதி, மாஸ்டர் போன்ற வெற்றிப்படங்களின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இவர் இப்போது கமலஹாசன் கூட்டணியில் “விக்ரம்” என்கிற படத்தை இயக்கி வருகிறார். இந்தியன் 2 விவகாரம் கொரனா முதல் இரண்டாம் அலைகள் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் என படப்பிடிப்பு இன்னும் துவங்கப்படாமல் இருந்தநிலையில்.
பல்வேறு நடிகர்களையும் மற்றும் பலரையும் தேர்வு செய்து வருகிறார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். விஜய் சேதுபதி, அஞ்சாதே நரேன் இசையாமைப்பாளர் அனிருத் என படத்தின் சில அங்கங்களை தேர்விட்ட அவர் இப்போது ஒளிப்பதிவாளராக தளபதி விஜய் ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் வந்த “சர்க்கார்” படத்திற்கு ஒளிப்பதிவு செய்த கிரிஷ் கங்காதரனை ஒப்பந்தம் செய்திருக்கிறார்.
ஆண்டனி வர்கீஸ் நடிப்பில் படப்பதிவில் இருக்கும் “ஜல்லிக்கட்டு” படத்தில் பணியாற்றிய கிரிஷின் அடுத்த ப்ராஜக்டாக கமலஹாசனின் “விக்ரம்” கிடைத்துள்ளது.

“சர்க்கார்” படத்தின் திரைத்துல்லியம் காட்சிப்படுத்தும் விதம் காமிரா டிரிக்ஸ் என மிரட்டி இருக்கும் கிரிஷ் “விக்ரம்” படத்தில் இனைந்திருப்பது படத்திற்கு மேலும் வலுசேர்த்துள்ளது.
தற்போது விக்ரம் படத்தில் பணியாற்ற உள்ள அனைத்து கலைஞர்களும் தங்களது துறையில் முன்னணியில் இருக்கின்றனர் அதனால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் தற்போது அதிகரித்துள்ளது.