கமர்ஷியல் கதைகளையே வேண்டாம் என முடிவெடுத்த 3 நடிகர்கள்.. அதிலும் தனுஷ் வேற லெவல்!

ஹீரோக்களுக்கு நடிக்கும் படங்களில் எப்படியாவது இரண்டு மூன்று படங்களாவது கமர்சியல் படங்களில் நடித்து விட வேண்டும் என்று ஒரு ஆசை இருக்கும். ஏனென்றால் கமர்சியல் படங்களில் மட்டுமே பணம் பார்க்க முடியும் என்பதால் அப்படிப்பட்ட படங்களிலேயே முன்னணி நடிகர்கள் நடிக்க ஆர்வம் காட்டுவார்கள்.

ஆனால் சமீபத்தில் கமர்சியல் படங்களை வேண்டாம் என்று மூன்று நடிகர்கள் வேறு விதமாய் படத்தை யோசித்துக் கொண்டு நடிப்பு வருகின்றனர். எங்களுக்கு சிறந்த கதைகள் தான் முக்கியம் என்பது போல் இருக்கிறது அவர்களின் எண்ணம். அது தொடர்பான கதைகளையே தேர்ந்தெடுத்து நடித்துக் கொண்டிருக்கின்றனர்.

விக்ரம்: டப்பிங் ஆர்டிஸ்டாக சினிமாவில் தன்னுடைய பயணத்தை துவங்கிய விக்ரம் அதன் பிறகு நடிகர், தயாரிப்பாளர், பின்னணிப் பாடகர் என தன்னுடைய பன்முகத்திறமையினால் காலூன்றி 56 வயதிலும் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக நடித்துக் கொண்டிருக்கிறார். அதிலும் இவர் கமர்சியல் திரைப்படங்களை நடிப்பதில் ஆர்வம் காட்டாமல் நல்ல கதை கொண்ட படங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து நடிப்பதையே தன்னுடைய வெற்றியாக நினைக்கிறார். அப்படிதான் சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான மகான் திரைப்படம் வசூல் ரீதியாகவும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இப்படித் தொடர்ந்து விக்ரம் நல்ல கதை கொண்ட படத்தை மட்டுமே நடிக்க முடிவெடுத்து செயல்படுகிறார்.

சூர்யா: என்னதான் சினிமாவில் வாரிசு நடிகராக நுழைந்தாலும் தன்னுடைய திறமையினால் நல்ல கதையம்சம் கொண்ட திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடிப்பதில் அவர் அதிக கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறாள். ஏழாம் அறிவு, பசங்க 2, 36 வயதினிலே, என் ஜி கே, காப்பான், சூரரைப்போற்று, ஜெய் பீம், எதற்கும் துணிந்தவன் போன்ற படங்களெல்லாம் இதற்கு உதாரணம். விவசாயம், சாதி ஏற்றத்தாழ்வு, அடிமைத்தனம், அரசியல் போன்ற சமுதாயத்திற்கு ஏற்ற கருத்துகளை தன்னுடைய படங்களில் காண்பித்து ரசிகர்களை நல்வழிப்படுத்தும் பொறுப்பையும் சூர்யா கையிலெடுத்து திறன்பட செயலாற்றுகிறார்.

தனுஷ்: கோலிவுட் மட்டுமின்றி தன்னுடைய திறமையான நடிப்பினால் பாலிவுட், ஹாலிவுட் என சிறகடித்துப் பறந்து கொண்டிருக்கும் நடிகர் தனுஷ், இதுவரை 4 தேசிய விருதுகளைப் பெற்ற பெருமைக்குரியவர். இவர் பெரும்பாலும் கமர்ஷியல் படங்களை தவிர்த்து நல்ல கதை கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடிப்பதில் சமீப காலமாகவே ஆர்வம் காட்டிக் கொண்டிருக்கிறார்.

அப்படிதான் இவருடைய நடிப்பில் வெளியான வேலையில்லா பட்டதாரி, அசுரன், கர்ணன் போன்ற படங்கள் இவரை மற்ற நடிகர்களிடம் இருந்து வித்தியாசப்படுத்திக் காட்டுகிறது. ஆகையால் அப்படிப்பட்ட படங்களை மட்டுமே நடிக்க வேண்டும் என்ற முடிவில் இருப்பது அவர் நடிக்கும் படங்களை வைத்துப் பார்த்தாலே தெள்ளத் தெளிவாக தெரிகிறது.

எனவே துணிச்சலாக இந்த மூன்று நடிகர்களும் எடுத்த முடிவில் அவர்கள் எண்ணியது போலவே வேற லெவலுக்கு முன்னேறிக் கொண்டிருக்கின்றனர். இதனால் கமர்சியல் கதைகளை தவிர்த்து நல்ல கதைகளுடன் இவர்களை அணுகினால் நிச்சயம் வாய்ப்பு கிடைக்கும் என்பது தெரியவந்துள்ளது.