500 கோடி லாபத்தை வைத்து கணக்கு போட்ட விக்ரம்.. வசமாக சிக்கிக் கொண்ட தயாரிப்பாளர்

ஒரு நேரத்தில் கதைக்கு ஏற்ற மாதிரி தன்னையே வருத்திக் கொண்டு படங்களில் நடித்து இவருக்கென்று தனி ரசிகர்கள் கூட்டத்தை ஏற்படுத்தியவர் தான் நடிகர் விக்ரம். ஆனால் சமீப காலமாக இவருடைய படங்கள் எதுவும் அந்த அளவிற்கு பேசும்படியாக அமையாமல் கலவையான விமர்சனங்களாக அமைந்தது. அதனாலயே இவர் கொஞ்சம் மனதளவில் உடைந்து போய்விட்டார்.

அந்த நேரத்தில் இவருக்கு கை கொடுத்து தூக்கிய படம் தான் பொன்னியின் செல்வன் முதல் பாகம். இப்படம் இவர்கள் அனைவரும் எதிர்பார்த்தபடியே மிகப் பிரமாண்டமாக அமைந்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. அதற்கு முக்கிய காரணம் இயக்குனர் மணிரத்தினம் மற்றும் தயாரிப்பாளர் தான். மேலும் அதன் வெற்றியை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகமும் எடுத்து முடித்து விட்டார்கள்.

இந்த படமும் முதல் பாகத்தைப் போலவே வெற்றியடைய வேண்டும் என்பதற்காக அதிக அளவில் மெனக்கெடு செய்து பிரமோஷன் செய்து வருகிறார்கள். அதற்காக படக்குழுவில் உள்ள அனைவரும் சேர்ந்து இந்தியா முழுவதும் பிரமோஷன் செய்து சுற்றி வருகிறார்கள். ஆனால் இதற்காக விக்ரம் தயாரிப்பாளரிடம் எங்களுக்கு தனியாக விமானம் வேண்டும் என்று கேட்டிருக்கிறார்.

அப்பொழுதுதான் சீக்கிரமாக வேலை முடிந்து திரும்பி வர முடியும் என்பதற்காக. இதனால் தயாரிப்பு நிறுவனமான லைக்கா என்ன செய்வது என்று தெரியாமல் விக்ரம் கேட்டதுக்கு மறுப்பும் தெரிவிக்க முடியாமல் சரி என்று அவர் கேட்டபடியே தனி விமானம் ஒன்றை அமைத்து அவர்களை அழைத்துச் சென்று வருகிறார்கள்.

இவர் கேட்டபடி என்னமோ தயாரிப்பாளர் கொடுத்துவிட்டார் ஆனால் அதன் பின் இதற்கு ஆகும் செலவுகளை நினைத்து கொஞ்சம் தவித்து வருகிறார். ஏனென்றால் இந்த செயலுக்காக ஒரு மாதத்திற்கு மட்டும் 1 கோடியை 80 லட்சம் ரூபாய் செலவு ஆகிறது. இந்த பிரமோஷன் முக்கியமானதாக இருந்தாலும் இந்த மாதிரி ஏற்பாட்டால் தயாரிப்பாளர் மிகவும் கலக்கத்தில் இருக்கிறார்.

ஆனால் இதையெல்லாம் விக்ரம் எந்த தைரியத்தில் கேட்கிறார் என்றால் பொன்னியின் செல்வன் படத்தில் கிடைத்த 500 கோடி லாபத்தை கணக்கிட்டு அதை வைத்து தான் கரெக்டா தயாரிப்பாளரை பயன்படுத்தி உள்ளார். இதனால் தயாரிப்பாளரும் வேறு எதுவும் பேச முடியாமல் விக்ரம் கேட்ட அனைத்துமே ஒப்புக்கொண்டு வசமாக சிக்கிக் உள்ளார் .