விக்ரமின் மனைவி என்ன வேலை செய்கிறார் தெரியுமா? பொறுமையை சோதிக்கற வேலையா இருக்கே

தமிழ் சினிமாவில் சிவாஜி மற்றும் கமல்ஹாசனுக்கு அடுத்து நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தவர் விக்ரம். இவரது தனித்துவமான நடிப்பால் வெளியான சேது, பிதாமகன் மற்றும் தெய்வத்திருமகள் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றன.

தற்போது விக்ரம் நடிப்பில் கோப்ரா மற்றும் துருவ நட்சத்திரம் படங்கள் விரைவில் வெளிவர உள்ளன. சமீபத்தில்கூட கோப்ரா படத்தின் டீசர் வெளியாகி சமூக வலைத்தளத்தில் ஓரளவிற்கு வரவேற்பை குறிப்பிடத்தக்கது.

சமீபகாலமாக நடிகர்களின் மனைவி யார் என்பதும் அவர்கள் என்ன வேலை செய்கிறார் என்பதும் தெரிந்து கொள்வதில் ரசிகர்கள் ஆர்வமாக இருந்து வருகின்றனர்.

அந்த வகையில் நடிகர் விக்ரமின் மனைவி ஷைலஜா பாலகிருஷ்ணன் என்ன வேலை செய்து வருகிறார் என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது. ஒரு படத்துக்கு பல கோடி சம்பளம் வாங்கும் விக்ரமின் மனைவி சென்னையில் உள்ள பள்ளி ஒன்றில் சைகார்திஸ்ட் ஆசிரியராக பணியாற்றி வருகிறா

இந்த தகவலை அறிந்த சினிமா வட்டாரத்தில் இருப்பவர்கள் விக்ரமின் மனைவியிடம் உங்கள் கணவர் தான் பல கோடி சம்பளம் வாங்குகிறார். நீங்கள் ஏன் வேலை செய்கிறீர்கள் என கேட்டுள்ளனர்.

அதற்கு அவர் நடிப்பு என்பது அவருடைய வேலை, பாடம் சொல்லிக் கொடுப்பது என்னுடைய வேலை என பெருமையாக கூறியுள்ளார். இந்த பதிலை கேட்டவர்கள் விக்ரமையும் அவரது மனைவியையும் பாராட்டி வருகின்றனர்.