பொன்னியின் செல்வன் படத்தில் விக்ரமின் மகள்.. அடடே எவ்ளோ பெரிய பொண்ணா வளர்ந்துட்டாங்க

மணிரத்தினத்தின் பொன்னியின் செல்வன் படத்தில் ஏகப்பட்ட திரை பிரபலங்கள் நடித்துள்ளனர். இப்படத்தின் ட்ரெய்லர் அண்மையில் வெளியான நிலையில் சோழ ராஜ்ஜியத்தை கண்முன் காட்டி உள்ளார் மணிரத்தினம். இப்படம் செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாக உள்ளது.

விக்ரம், விக்ரம் பிரபு, ஜெயம் ரவி, கார்த்தி, ஜெயராம், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் மற்றும் பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். இதில் விக்ரமின் மகள் இருப்பதை நெட்டிசன்கள் கண்டுபிடித்துள்ளனர். அதாவது விக்ரம் நடிப்பில் வெளியான தெய்வத்திருமகள் படத்தில் நிலா என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் சாரா.

ஏ எல் விஜய் இயக்கத்தில் வெளியான இப்படத்தில் சாரா குழந்தை நட்சத்திரமாக இருந்தாலும் தத்ரூபமாக நடித்திருந்தார். அதுமட்டுமின்றி விக்ரம், சாரா இடையே ஆன காட்சி ரசிகர்களின் கண்களில் கண்ணீரை வரச் செய்தது. அதிலும் சைவம் படம் சாராவுக்கு மிகப்பெரிய பாராட்டைப் பெற்றுத் தந்தது.

சாரா சில படங்களில் நடித்தாலும் மக்கள் மனதில் இடம் பிடித்து விட்டார். இவர் தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழி படங்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் விக்ரமுடன் மீண்டும் இணைந்து பொன்னியின் செல்வன் படத்தில் சாரா நடித்துள்ளார்.

அதாவது பொன்னியின் செல்வன் படத்தில் நந்தினி கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா ராய் நடித்துள்ளார். இதில் நந்தினியின் சிறுவயது காட்சிகளில் சாரா நடித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதேபோல் ட்ரெய்லர் வெளியான நிலையில் அதில் சாரா இடம்பெற்று இருப்பது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

Sara

அதிலும் சின்ன வயதில் பார்த்த சாராவா இது, இவ்வளவு வளர்ந்து விட்டார்களா என்று ரசிகர்கள் ஆச்சரியப்படுகின்றனர். அதுமட்டுமின்றி சிறு பட்ஜெட் படங்களில் மட்டுமே நடித்து வந்த சாராவுக்கு பிரம்மாண்ட படமாக பொன்னியின் செல்வன் படம் அமைந்துள்ளது. இதன் மூலம் இவருக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் வர வாய்ப்புள்ளது.