கோப்ராவிற்கு பின் எகிற போகும் விக்ரமின் மார்க்கெட்.. அடுத்தடுத்து 3 பெரிய இயக்குனருடன் கூட்டணி

விக்ரம் கஷ்டப்பட்டு சினிமாவில் நடித்து பலனை இன்று அனுபவித்து வருபவர். இவர் தமிழ் சினிமாவிற்கு கிடைத்த பொக்கிஷமாக பார்க்கப்படுகிறார். கமலுக்கு அடுத்து அவர் கதாபாத்திரங்களை அவருக்கு நிகராக செய்யக்கூடியவர் என்று அனைவரும் அறிந்த ஒன்று. அவர் நடிக்கும் படங்களில் அவர் நடிப்புக்கவே பார்க்கும் பல ரசிகர்கள் இன்றும் இருந்து கொண்டிருக்கிறார்கள்.

விக்ரமின் கெட்ட நேரமோ என்னவோ தெரியவில்லை கடந்த 17 வருடங்களில் 2, 3 படங்களைத் தவிர மற்ற படங்கள் அனைத்தும் தோல்வி அடைந்துள்ளது. இது அவர் ரசிகர்களிடம் பெரும் ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது. ஆனால் இவரது நடிப்பு மட்டும் அதில் தனியாக தெரியும். தற்போது நடித்து வெளிவந்த கோப்ரா திரைப்படமும் பிரமாண்டமும் இவரது நடிப்பு மட்டுமே நன்றாக உள்ளது, படம் எதிர்ப்பார்த்த போல் இல்லை என்று கூறப்படுகிறது.

இதற்கு முன்னர் வந்த மகான் திரைப்படமும் மிகுந்த எதிர்பார்ப்புக்கு இடையே வெளியானது. ஆனால் அது OTT-யில் வெளிவந்து ரசிகர்களின் எதிர்பார்ப்பை குறைத்தது. படமும் சரியாக இல்லை என்ற காரணத்தால் அந்த படமும் மிகப்பெரிய ஏமாற்றத்தை அளித்தது. அது திரையரங்கில் வெளியாகி இருந்தால் கூட ஒரு அளவிற்கு வசூல் பெற்றிருக்கும் ஆனால் அதற்கும் தகுதி இல்லாமல் போய்விட்டது.

இதற்கு அடுத்து வரும் படங்கள் மட்டுமே இனிமேல் விக்ரமின் சினிமா வாழ்க்கைக்கு முக்கியமானதாக கருதப்படும். கோப்ரா பட தோல்விக்கு பிறகு வெளிவரும் பொன்னியின் செல்வன் மற்றும் சில வருடங்களாக எதிர்பார்த்து வெளிவரும் துருவ நட்சத்திரம் போன்ற படங்கள் அவருக்கு வெற்றிப் படங்களாக அமையும் என்று நம்பப்படுகிறது.

புதிதாக மூன்று படங்களில் ஒப்பந்தமாகி இருக்கிறார் விக்ரம் பா.ரஞ்சித் இயக்கும் 19ஆம் நூற்றாண்டு கதைக்கான திரைப்படம். இந்த படம் அனைத்து மொழிகளிலும் வெளிவருகிறது. அடுத்து சமந்தா நடித்த யு-டன் திரைபடம் இயக்குனர் பவன் குமார் மற்றும் அஜய் ஞானமுத்துவுடன் படத்தில் மீண்டும் படத்தில் நடிக்கிறார்.

இந்தப் படங்கள் அனைத்தும் மிகப் பெரிய படங்கள் இதில் அவருக்கு வெற்றி கிடைக்க வேண்டும் என்று ரசிகர்கள் ஆசைப்படுகிறார்கள். அதற்கு தகுந்தார் போல் கதையை கேட்டு அதன் பிறகு நடிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். விக்ரம் நினைத்தால் மட்டுமே இதனை சரி செய்ய முடியும் வரும் படங்களில் பார்க்கலாம் என்ன செய்யப் போகிறார் என்று. அவரது வெற்றிப் படத்தை எதிர்பார்க்கும் கோலிவுட் மற்றும் அவரது ரசிகர்கள்.