Actor Vinayankan: ஜெயிலர் படத்தின் மூலம் ரஜினி கம்பேக் கொடுத்த நிலையில் அவரை விட பெரிதும் பேசப்படும் நடிகர் விநாயகன். மலையாள சினிமாவில் மிகவும் பிரபலமான விநாயகன் நடன கலைஞராகத்தான் சினிமாவில் அறிமுகமாகி இருக்கிறார். அதோடு மட்டுமல்லாமல் இசையமைப்பாளர், பின்னணி பாடகர் என பல பரிமாணங்களை கொண்டிருக்கிறார்.
மலையாள சினிமாவில் வில்லன் நடிகர் என்றாலே முதலில் நினைவுக்கு வருவது விநாயகன் தான். ஆனால் தமிழில் அவர் பெரிய அளவில் கொண்டாடப்படவில்லை. திமிரு படத்தில் ஸ்ரேயா ரெட்டியின் வலது கையாக மாற்றுத்திறனாளி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதைத்தொடர்ந்து சில படங்களில் இவர் நடித்திருந்தாலும் மரியான் படம் பெயரை வாங்கிக் கொடுத்தது.
ஆனாலும் ஜெயிலர் படம் அவரை உச்சாணி கொம்பில் உட்கார வைத்தது. இப்போது தமிழ் சினிமாவில் உள்ள இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் விநாயகனே தான் வலை வீசி தேடி வருகிறார்கள். இவரைப் போன்ற ஒரு மாசான வில்லன் தான் தேவை என்று படையெடுக்க தொடங்கி இருக்கிறார்கள்.
இந்நிலையில் விநாயகனை பற்றிய நிறைய செய்திகள் தொடர்ந்து வெளியாகி வருகிறது. இதில் அவரின் விசுவாசிகள் பற்றி தான் நாம் பார்க்க இருக்கிறோம். பொதுவாகவே வளர்ப்பு பிராணிகள் மீது சிலருக்கு ஈடுபாடு அதிகமாக இருக்கும். அதுவும் பெரும்பாலானோ நாய்கள் மீது அதீத பிரியம் வைத்திருப்பார்கள்.
எல்லாவற்றிலுமே வித்தியாசம் காட்டும் விநாயகன் தனது வளர்ப்பு நாய்கள்களிலும் அதை செய்திருக்கிறார். இவர் வளர்க்கும் நாய்கள் ஜெயிலர் வர்மனை விட 10 மடங்கு டேஞ்சராம். அதாவது மனித உயிரையே காவு வாங்கும் அளவுக்கு கொடூரமானவை. அப்பேர்ப்பட்ட நாய்களை தான் விநாயகன் வளர்த்து வருகிறார்.
அதோடு மட்டுமல்லாமல் இந்த நாய்களை வளர்க்க வேண்டும் என்றால் லைசன்ஸ் வாங்க வேண்டுமாம். மேலும் இவற்றை பராமரிக்கவே மாதத்திற்கு இலட்சக்கணக்கில் செலவாகுமாம். தன்னைப் போலவே பயங்கரமான விசுவாசிகளை பக்கத்திலேயே வைத்திருக்கிறார் ஜெயிலர் வர்மன்.