லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் லியோ. ஒரு மாதத்திற்கு மேலாக காஷ்மீரில் படபிடிப்பு நடந்து வந்த நிலையில் தற்பொழுது சென்னையில் படப்பிடிப்பை நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளனர். காஷ்மீர் படப்பிடிப்பில் இயக்குனர் மிஷ்கின், கௌதம் மேனன், பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், த்ரிஷா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்நிலையில் விஜய் நடிக்கும் லியோ படத்தில் புதிதாக பிரபல வில்லன் நடிகர் ஒருவரும் இணைந்துள்ளார்.
அதிலும் விஜய்யுடன் அதிகமான படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் ஒருவரும் மீண்டும் கூட்டணி அமைத்திருப்பது அனைவரின் மத்தியில் படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கச் செய்துள்ளது. அதிலும் 90ஸ் கிட்ஸ் இன்றும் கூட அந்த வில்லனை பார்த்து மிரளுவார்கள். அந்த அளவிற்கு தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தக் கூடியவர் ஆவார்.
அதிலும் குறிப்பாக கேப்டன் பிரபாகரன் படத்தில் விஜயகாந்தையே வீரபுத்திரன் என்னும் கதாபாத்திரத்தில் நடித்து மிரள விட்டவர் தான் மன்சூர் அலிகான். இவர் அதிகமான படங்களில் வில்லன் கதாபாத்திரங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்திருக்கிறார். இதனால் ரசிகர்களின் மத்தியில் பரிட்சயமான நடிகராகவே இருந்து வருகிறார்.
அந்த வகையில் விஜய்யுடன் அதிகமான படங்களில் இவர் வில்லனாக நடித்திருக்கிறார். குறிப்பாக நாளைய தீர்ப்பு, தேவா, வசந்த வாசல், மின்சார கண்ணா என பத்திற்கும் மேற்பட்ட படத்தில் விஜய் உடன் சேர்ந்து நடித்திருக்கிறார். அதிலும் இவர்கள் இணைந்து நடித்த தேவா திரைப்படம் சிறப்பான வரவேற்பை பெற்றது. அதன் பிறகு இவர்கள் எந்த படத்தில் இணைந்து நடிக்கவில்லை.
தற்பொழுது நீண்ட இடைவெளிக்கு பிறகு விஜய் உடன் கூட்டணி அமைத்து இருப்பது பெரும் மகிழ்ச்சி என்று சமீபத்தில் அளித்த பேட்டியில் தெரிவித்திருந்தார் மன்சூர் அலிகான். அதிலும் லியோ படத்தில் நடிப்பதற்காக இவரிடம் அதிகமான தேதிகளை கேட்டு வாங்கியுள்ளனர். இதையெல்லாம் பார்க்கும் பொழுது ரசிகர்கள் லியோ படத்தில் கண்டிப்பாக தரமான சம்பவம் இருக்கும் என்ற எதிர்பார்ப்பில் இருந்து வருகின்றனர்.
இந்நிலையில் மன்சூர் அலிகான் ஏற்கனவே நடித்துக் கொண்டிருந்த சரக்கு படத்தில் தான் தற்பொழுது நடித்துக் கொண்டிருக்கிறார். இதனை அடுத்து இப்பொழுதுதான் லியோ பட குழுவானது காஷ்மீரில் படப்பிடிப்பை முடித்து சென்னை திரும்பி உள்ளனர். இதன் பிறகு தான் சென்னையில் நடைபெறும் ஷூட்டிங்கில் மன்சூர் அலிகான் உடைய காட்சிகள் படமாக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.