கடந்த பல நாட்களாக ரசிகர்கள் பலரும் ஆவலுடன் காத்துக் கொண்டிருந்த துணிவு படத்தின் ரிலீஸ் நாள் நெருங்கி விட்டது. இன்னும் சில மணி நேரங்களில் இப்படம் ரசிகர்களின் பார்வைக்கு வர இருக்கிறது. இதற்காகவே பெரும் ஆவலுடன் காத்திருக்கும் அஜித் ரசிகர்கள் துணிவு படத்தை திருவிழா போல் கொண்டாடுவதற்கு தயாராகி விட்டனர்.
இப்படி ரசிகர்களின் ஆரவாரம் ஒரு புறம் இருக்க மறுபுறம் படத்தின் இயக்குனரான வினோத் பல சேனல்களுக்கும் இந்த திரைப்படம் குறித்து பேட்டி அளித்து வருகிறார். அதில் அவர் பேசும் விஷயங்களும், அவருடைய முதிர்ச்சியான பேச்சும் ரசிகர்களை அசர வைத்துள்ளது. ஏனென்றால் இந்த படத்தை பார்க்க வரும் ரசிகர்கள் அனைவரும் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் வாருங்கள் என அவர் தெரிவித்துள்ளார்.
பொதுவாக ஒரு திரைப்படத்தை பற்றி பிரமோஷன் செய்பவர்கள் படத்தை பற்றி இப்படி என்று பில்டப் செய்வார்கள். ஆனால் வினோத் அப்படி எதுவும் செய்யவில்லை. அதற்கு மாறாக படத்தைப் பற்றி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் ரசிகர்களுக்கு அமைதியான முறையில் ஒரு விஷயத்தை தெளிவுபடுத்தி இருக்கிறார்.
அதாவது துணிவு திரைப்படத்தை பொருத்தவரையில் உங்கள் ஆவலும், எதிர்பார்ப்பும் ரொம்ப அதிகமாக இருக்கிறது. ஒரு ரசிகராக நீங்கள் இவ்வளவு எதிர்பார்க்க கூடாது. படத்தை படமாக மட்டுமே ரசித்து பாருங்கள். 100 கோடி ரூபாய் செலவு செய்து நாங்கள் படம் எடுத்தால் அதை எப்படியும் நாங்கள் சம்பாதித்து விடுவோம்.
அதனால் ரசிகர்கள் கொஞ்சம் யோசித்து செயல்படுங்கள் என்று வினோத் கூறியிருக்கிறார். இது பலருக்கும் ஆச்சரியத்தை தான் ஏற்படுத்தி இருக்கிறது. தேவையில்லாமல் ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பை கொடுத்து ஏமாற்றாமல் அவர் இவ்வாறு பேசியிருப்பது பாராட்டவும் வைத்திருக்கிறிருக்கிறது. மேலும் ஒரு சிலர் இவர் எந்த வகையறா என்றே தெரியவில்லையே எனவும் ஆச்சரியமாக பேசுகின்றனர்.
அந்த அளவுக்கு இவருடைய பேட்டி ஒவ்வொன்றும் வியப்பை ஏற்படுத்துகிறது. மேலும் அஜித் இது போன்ற பிரமோஷன் உள்ளிட்ட எந்த நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ள மாட்டார். படத்தில் நடித்து முடிப்பதோடு அவருடைய கடமை முடிந்து விட்டது. ஆனால் தற்போது வினோத் பேசியிருக்கும் இந்த விஷயம் நாம் ஏன் ரசிகர்களுக்கு இதைக் கூறவில்லை என அவரையே கொஞ்சம் யோசிக்க தான் வைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.