கேரியரை காப்பாற்றிக்கொள்ள விஷால் போடும் திட்டம்.. விஜய்க்கு மறுப்பு தெரிவிக்க சொன்ன காரணம்

சமீப காலமாக விஷால்க்கு எந்த படமும் சரியாக ஓடவில்லை. இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் திக்குமுக்காக திணறி வருகிறார். இவர் ஒரு காலகட்டத்தில் முன்னணி நடிகராக வலம் வந்து ரசிகர்களின் பேராதரவை பெற்றார். அத்துடன் இவருக்கு வந்த படங்கள் எல்லாமே வெற்றி படமாக அமைந்தது.

அதை மட்டுமே முழு கவனமாக வைத்திருந்தால் இன்றைக்கு இவர் ஒரு டாப் ஹீரோக்களின் ஒருவராக இருந்திருப்பார். ஆனால் இதை ஒழுங்காக செய்யாமல் நடிகர் சங்கத் தலைவர்களில் நின்று வெற்றி பெற்றார். அதிலிருந்து இவருடைய சினிமா கேரியர் க்ளோஸ் ஆகிவிட்டது என்றே சொல்லலாம்.

ஏனென்றால் இவருக்கு கடைசியாக ஓடின படம் எதுவென்றே தெரியவில்லை அந்த அளவிற்கு தான் நடித்து வருகிறார். இவர் நடிப்பில் வந்த வீரமே வாகை சூடும், லத்தி போன்ற படங்கள் கூட இவருக்கு கை கொடுக்கவில்லை என்றே சொல்லலாம். இவருக்கு கடைசியாக வெற்றி படமாக அமைந்தது இரும்புத்திரை திரைப்படம்.

இப்படியே இவர் நிலமை தொடர்ந்து வந்தால் சினிமா கேரியரை தொலைத்து விடுவார். அதை மனதில் வைத்துக்கொண்டு இப்பொழுது சினிமாவில் நடிப்பதற்கு முழு கவனத்தையும் செலுத்தி வருகிறார். அதனால் இப்பொழுது சங்கமித்ரா படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

இதனைத் தொடர்ந்து விஷால் துப்பறிவாளன் இரண்டாம் பாகத்தை அவரே இயக்கி நடிக்க உள்ளார். இதற்கான சூட்டிங் இப்பொழுது நடந்து கொண்டிருக்கிறது.. இந்தப் படங்களின் மூலம் விட்ட இடத்தை பிடித்து ஒரு முன்னணி ஹீரோவாக வர வேண்டும் என்று மும்மரமாக வேலை பார்த்து வருகிறார்.

இந்நிலையில் விஜய்யின் லியோ படத்தில் வில்லனாக நடிப்பதற்கு விஷாலை கேட்டபோது வில்லனாக நடித்தால் சினிமா கேரியரை போய்விடும் என்று அச்சத்தில் விஜய்க்கு மறுப்பு தெரிவித்திருக்கிறார். ஆனால் இப்பொழுது அந்த மாதிரி வில்லனாக நடிப்பது தான் ட்ரெண்டாகி வருகிறது என்பதை அவர் புரிந்து கொள்ளவில்லை. கிடைத்த ஒரு நல்ல வாய்ப்பையும் யோசிக்காமல் மறுத்துவிட்டார்.