Mark Antony-Vishal: இப்போது எங்கு பார்த்தாலும் மார்க் ஆண்டனி படத்தை பற்றிய பேச்சு தான் பரவலாக பேசிக்கொண்டு இருக்கிறார்கள். விஷாலின் படத்திற்கு இப்படி ஒரு வரவேற்பா என ஆச்சரியத்தில் உறைந்தாலும் இதனால் அவருக்கு சல்லி காசுக்கு பிரயோஜனம் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். அதாவது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் மற்றும் எஸ்ஜே சூர்யா நடிப்பில் மார்க் ஆண்டனி படம் வெளியானது.
விஷாலுக்கு படங்கள் ஓடியே கிட்டத்தட்ட நான்கு ஐந்து வருடங்களுக்கு மேல் ஆகிறது. இந்த சூழலில் மார்க் ஆண்டனி படம் 100 கோடி வசூல் செய்து பட்டையை கிளப்பி வந்தாலும் விஷாலுக்கு இதில் திருப்தி இல்லையாம். இதற்கு காரணம் எஸ்ஜே சூர்யா தான் என்று கூறப்படுகிறது. அதாவது மார்க் ஆண்டனி படம் என்றால் யாரும் விஷால் படம் என்று கூறவில்லையாம்.
ஏனென்றால் மொத்தமாக படத்தில் எஸ்ஜே சூர்யா ஸ்கோர் செய்துவிட்டார். இப்போது திரையரங்குகளில் மக்கள் கூட்டம் கூடுவதற்கான காரணமும் எஸ்ஜே சூர்யா தான். அவரின் மார்க்கெட் உயர்ந்துள்ளது தவிர விஷாலின் மார்க்கெட் அப்படியேதான் இருக்கிறது.
ஆனால் மார்க் ஆண்டனி படத்தின் ப்ரோமோஷனுக்கு விஷால் தான் சுற்றி திரிந்தார். எஸ்ஜே சூர்யாவோ உட்கார்ந்த இடத்திலேயே இருந்து மொத்த ரசிகர்களையும் கவர்ந்து விட்டார். இதனால் அவருடைய கொடி தான் இப்போது ஓங்கி பறந்து வருகிறது. ஆகையால் இனி விஷால் சோலோ ஹீரோவாக நடித்தால் ரசிகர்கள் யாரும் பார்க்க மாட்டார்கள் என்ற நிலை தான் ஏற்பட்டிருக்கிறது.
தெரியாமல் எஸ்ஜே சூர்யா உடன் நடித்துவிட்டு இப்போது தனது ஹீரோ அந்தஸ்த்திலிருந்து இறங்கி இருக்கிறார். இனி செகண்ட் ஹீரோ சப்ஜெக்ட்டில் நடித்தால் மட்டுமே அவருக்கு வெற்றி கிடைக்கும் என்று அரசல் புரசலாக பேசப்பட்டு வருகிறது. இவ்வாறு விஷால் கேரியரையே மார்க் ஆண்டனி படம் க்ளோஸ் செய்துவிட்டது.
இதனால் விஷால் அடுத்து ஹீரோவாக நடித்த படங்கள் வெளியானாலும் ரசிகர்களை கவர வாய்ப்பே இல்லை என்ற நிலையில் இருக்கிறார். ஏற்கனவே பெரிய ஹீரோக்களின் படங்களில் வாய்ப்பு வந்த போது விஷால் நிராகரித்துவிட்டார். இனி அதுபோன்ற படங்களில் நடித்தால்தான் சினிமாவில் அவரால் நிலைத்து நிற்க முடியும் என்ற நிலை ஏற்பட்டிருக்கிறது.