லைக்காவிடம் பல கோடி ஆட்டைய போட்ட விஷால்.. அதிரடி அறிவிப்பை வெளியிட்ட நீதிமன்றம்

லைக்கா நிறுவனத்திற்கு கொடுக்க வேண்டிய பல கோடிகளை செலுத்த தவறியதால் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார். நடிகர் விஷால் தன்னுடைய சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘விஷால் பிலிம் ஃபேக்டரி’ மூலம் படத்தினை தயாரிக்க, மதுரை அன்புச் செழியன் இடமிருந்து ரூபாய் 21 கோடியே 29 லட்சத்தை கடனாக வாங்கி இருக்கிறார்.

அந்த கடனை திருப்பிக் கொடுக்க முடியாத நிலையில் விஷால் இருந்ததால், இதனை ஏற்றுக்கொண்டு லைக்கா நிறுவனம் அந்த தொகையை செலுத்தியது. அதற்கு பதில் விஷால் தயாரிப்பில் வெளியாகும் படங்களின் உரிமைகளை லைக்காவிற்கு வழங்குவதாக உத்தரவாதம் அளிக்கப்பட்டது.

இதற்கிடையே கடனை செலுத்தாமல் விஷால், தனது தயாரிப்பில் நடித்த ‘வீரமே வாகை சூடும்’ படத்தை லைக்காவின் அனுமதி இல்லாமல் வெளியிட்டார். இதனால் கோபத்தின் உச்சத்துக்கே சென்ற லைக்கா சென்னை ஐகோர்ட்டில் வழக்குத் தொடர்ந்தது.

இதனை விசாரித்த நீதிபதி,  நடிகர் விஷால் ரூபாய் 15 கோடியை உயர் நீதிமன்ற தலைமை பதிவாளர் பெயரில் வங்கியில் நிரந்தர வைப்புத் தொகையாக டெபாசிட் செய்ய வேண்டும். அது மட்டுமல்ல சொத்து பத்திரங்களையும் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை எதிர்த்து இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வில் விஷால் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதி விஷால் ரூபாய் 15 கோடியை செலுத்தியே ஆக வேண்டும் என்று உத்தரவை உறுதி செய்து  தீர்ப்பளித்தனர்.

இதனை செய்யாவிட்டால் தனி நீதிபதி அமர்வில் தீர்ப்பு வரும் வரை விஷால் பிலிம் ஃபேக்டரி தயாரிக்கும் படங்களை தியேட்டர்களிலோ அல்லது ஓடிடி-யிலோ வெளியிட தடை விதித்து, மேல் முறையீட்டு வழக்கை முடித்து வைத்தனர்.